மூன்றாம் பாலினத்தவருக்கான இடஒதுக்கீடு: கடந்துவந்த பாதையும் கடக்க வேண்டிய தூரமும்

கிரேஸ் பானு

2013ல் முதல் முதலாக நானும் சுவப்னாவும் திருநருக்கான கல்வி வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்ற கோருக்கையை முன்வைத்து போராட்டக்களத்தில் இறங்க முடிவுசெய்தோம். அப்பொழுது இந்தக் கோரிக்கையை திருநர் சமூக மக்கள் கேலியாகவும் கிண்டலாகவும் தான் பார்த்தார்கள் “நாமலே மக்கள் தொகையில் மிக மிக குறைவு. இதுல இடஒதுக்கீடு கேட்கிறதுலாம் ஓவர் “ என பேசிய அதே நாவுகள் இன்று அந்த கோரிக்கையை பேச வேண்டிய கட்டாயம் வந்தவுடன் பேச ஆரம்பித்தார்கள். நாங்கள் சோர்ந்து போகாமல் சுவப்னா, கிரேஸ்பானு, செல்வி, சாரதா, செல்வம், ஜொவின், லிவிங் ஸ்மைல் வித்யா, அப்சரா, சாலமன், சிவக்குமார், ராகவராஜ், ராஜசேகர்,ஜோ பிரிட்டோ, மாறன், அருண்சோரி மற்றும் பல தோழர்களின் ஈடுபாட்டில் பல்வேறு கட்ட போராட்டங்களை முன் வைத்தோம்.
1. கண்ணகிசிலை அருகே சாலை மறியல்
2. தமிழக அரசு தேர்வாணையம் முற்றுகை
3. தலைமைச்செயலக முற்றுகை
போன்ற போராட்ட வடிவில் எங்கள் கோரிக்கைகளை அரசுக்கு முன் வைத்தோம். அதன் பின் கிரேஸ் பானு, சுவப்னா, லிவிங் ஸ்மைல் வித்யா, திருநம்பி செல்வம்,செல்வி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தோம்.

  1. திருநர்களுக்கு மாற்றுப்பாலினத்தவர் என்று தனியாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 3% இட ஒதுக்கீடு வழங்கவேண்டும்.

  2. அரசு தேர்வாணையம் நடத்தும் தேர்வு விண்ணப்பங்களில் திருநர்கள் தங்கள் பாலினத்தை குறிப்பிடும் வண்ணம் இடம்பெறவேண்டும்.
    என பல கோரிக்கைகளை முன்வைத்து தொடரபட்ட வழக்கில் தமிழக அரசு தமிழக அரசு உப்பு சப்பான பல காரணங்களை கூறி இட ஒதுக்கீடு வழங்க முடியாது என கூறியது அந்த காரணங்கள் பின் வருவன

  3. தமிழகத்தில் மொத்தம் 3471 திருநங்கைகள் மட்டும் தான் இருக்கிறார்கள் (இது சுத்த பொய்)

  4. திருநங்கைகளுக்கு தையல் மிசின்,சுய உதவிக்குழு,கம்ப்யூட்டர்,வீடு,போன்ற நலத்திட்ட உதவிகள் செய்கிறோம் உள்ளிட்ட பல காரணங்களை கூறியது .

இதனையடுத்த இந்த வழக்கு கடந்த புதனன்று நீதிபதி சஞ்ஜய் கிஷன் கௌவுல் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இதில் திருநருக்கு கல்வி,வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க தமிழ அரசு 6 மாதத்திற்குள் முடிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். இது உண்மையிலேயே வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பாக நான் கருதுகிறேன். காரணம் எந்த ஒரு ஒடுக்கபட்ட சமூகத்திற்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமத்துவத்தை வழங்கினாலே அச்சமூகம் மேலெழுந்து வர உறுதுணையாக இருக்கும். அடிமைபட்ட சமூகம் இட ஒதுக்கீடு என்ற ஒன்றால் தான் முன்னுக்கு வந்திருப்பது வரலாறு. அதே போல் இந்த ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கும் இடஒதுக்கீடு வழங்கினால் தான் இச்சமூகம் முன்னேற்றத்திற்கான முழுமையான தீர்வாக இருக்கும்.

கிரேஸ் பானு, இந்தியாவிலே முதன் முறையாக பொறியியல் பயிலும் திருநங்கை மாணவி.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.