நூற்றுக்கணக்கான மக்கள் உடலில் நீல நிறத்தை பூசி இங்கிலாந்தின் ஹல் நகரில் ஒன்று கூடியினர். இது முழுக்க கலைக்காக. ஹல் நகரின் கடலுடனான உறவைக் குறிக்கும் வகையில் நீல நிறத்தைப் பூசி ஒளிப்படங்களுக்காக நின்றனர் இந்த மக்கள். இந்தக் கலை நிகழ்வை சீ ஆஃப் ஹல் என்ற பெயரில், நியூயார்க் கலைஞர் ஸ்பென்சர் ட்யூனிக் நிகழ்த்தினார்.