ஸ்வாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமாரின் தங்கை தனது அண்ணன் குற்றம் செய்திருக்க வாய்ப்பில்லை என புதிய தலைமுறைக்குப் பேட்டியளித்திருந்தார். இந்தப் பேட்டி யூ ட்யூப்பில் உள்ளது. இந்த லிங்கின் கீழே பலர் கருத்து பதிவிட்டுள்ளனர். அதில் 99 சதவிதம் பேர் ராம்குமார் தான் கொலையாளி என உறுதியாகத் தெரிவிப்பதுடன், அவருக்கு பரிந்து பேசுவதாக தங்கை மீது கடும் வன்மத்தை வெளிப்படுத்துகின்றனர்.
“ஸ்வாதி மாதிரி உன்னையும் கொல்லணும்”
“உன்னோட நிர்வாணப்படத்தை வெளியே விடுவேன்”
“மொத்த குடும்பத்தையும் தூக்கில் போடணும்”
“குடும்ப மானம் போச்சு, உன்னை யாரும் கல்யாணம் பண்ண மாட்டாங்க; அவ்வளவு ஏன் உன்னை சின்ன வீடா கூட எவனும் வெச்சிக்கமாட்டான்”
என மனு நீதிப்படி தண்டனை வழங்க விசாரணை எதுவும் செய்யாமலேயே மொத்த குடும்பத்தையும் தூக்கில் இட துடிக்கிறது இந்தக் கூட்டம். வீடியோ பதிவுக்குக் கீழே உள்ள சில பின்னூட்டங்களை இங்கே தந்திருக்கிறோம்.