நீதி எல்லோருக்கும் சமமானதாக இருக்கும்பட்சத்தில் விசாரணை, தண்டனை என இந்திய தண்டனைச் சட்டம், நீதிமன்றம் இயங்கும் அதே முறையில் ஸ்வாதி படுகொலை தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருக்கும் ராம்குமார் மீதான வழக்கும் விசாரிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கான அறிகுறிகளே இங்கே தென்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்படும்வரை அந்த வழக்கில் கைது செய்யப்பட்டவரை கொலையாளி என எவரும் சுட்டக்கூடாது என்பது விதி. பெரும்பாலும் பார்ப்பனர் தலைமையில் கீழ் இயங்கும் ஊடகங்கள், பார்ப்பனமயமாக்கப்பட்ட ஊடகங்கள் கொல்லப்பட்டவர் பார்ப்பன சமூகத்தவர் (பெண் என்பதற்காகவெல்லாம் இல்லை; ஜெயந்திரர் என்ற பார்ப்பனருக்காவும் முழங்கியவர்கள் என்பதை நினைவில் கொள்க) என்பதற்காக வரிக்கு வரி, சொல்லுக்கு சொல் ‘கொலையாளி’ என விளிக்கின்றன. ஓயாமல் ஊடக அறம் குறித்து பாடம் எடுக்கும் இவர்கள் குற்றம் நிரூபிக்கும் முன்பே ‘கொலையாளி’ என்று முத்திரை குத்துவது ஏன்?
குறிப்பாக, ஆர் எஸ் எஸ் என்ற இந்துத்துவ அமைப்பை (பல குற்றங்களில் தொடர்புடைய அமைப்பு) வெளிப்படையாக ஆதரிக்கும் ‘தினமணி’ ஏடு, ராம்குமாரை தூக்கில் ஏற்றத் துடியாகத் துடிக்கிறது. அதாவது தன்னுடைய பார்ப்பன அதிகார பலத்தின் மூலம் ஆட்சிக்கு நெருக்கமானதாகக் காட்டிக்கொள்ளும் தினமணி, அரசுக்கு பரிந்துரைக்கிறது என்றும் சொல்லலாம்.
தினமணி எழுதியுள்ளதைப் படியுங்கள்:
சென்னை, சூளைமேட்டைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, கடந்த மாதம் 24-ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்டார்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், இன்று மதியம் நெல்லை முதலாவது குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ராமதாஸ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். மருத்துவமனையில் இருக்கும் ராம்குமாரிடம் நீதிபதி வாக்குமூலம் பெறுவதோடு விசாரணையும் நடத்தினார்.
பின்னர் குற்றவாளி ராம்குமாரை நாளை சென்னை பெரு நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் சற்று முன், நெல்லை பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் இருந்து ராம்குமாரை ஆம்புலன்சில் ஏற்றிய போலீசார் சென்னை புறப்பட்டனர்.
பொது, மற்றும் கண், காது, மூக்கு மருத்துவர் உட்பட 5 பேர் அவருடன் ஆம்புலன்சில் சென்னை வருகின்றனர். இந்நிலையில், ராம்குமார் நாளை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸ் காவலில் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வழக்கை மற்ற வழக்குகள் போல் அல்லாமல் ஒன்றிரண்டு மாதத்திற்குள் முடிக்க உள்ளதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் ராம்குமாருக்கு மரண தண்டனை வரை வழங்க வாய்ப்பு இருந்தாலும், தண்டனையை விசாரணை நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும். காதல் விவகாரம் என்பதாலும், இதற்கு முன் எந்த வழக்கிலும் சிக்காதவர் ராம்குமார் என்பதாலும், தற்போது மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுவதாலும், அவருக்கு மரண தண்டனைக்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் மரண தண்டனைக்கான வாய்ப்பு இல்லை என்பதை பூணூலைத் தடவிக்கொண்டே எழுதிய நபருக்கும் தெரிந்திருக்கிறது. இருந்தும் தன்னுடைய எழுத்திலாவது குற்றம்சாட்டப்பட்ட ராம்குமாரை தூக்கில் ஏற்ற வேண்டும் என்கிற மனபிறழ்வுடன் இதை எழுதியிருப்பதாக நாம் அவருடைய உளவியலை யூகிக்க முடிகிறது.
கொல்லப்பட்ட ஸ்வாதி என்ற பார்ப்பனருக்காக (அவர்கள் உரிமை கோருவதால் நாம் சுட்டுகிறோம்) பூணூலைத் தெறிக்கவிடும் தினமணி, சங்கரராமன் என்ற நீதியை, நேர்மையை விரும்பிய அதற்காக தன்னுயிரை தியாகம் செய்த பார்ப்பனருக்கு நீதி கிடைக்க துடித்ததா? குறைந்தபட்ச தண்டனையாவது கிடைக்க வேண்டும் என்று விரும்பியதா? அந்தக் கதையெல்லாம் நாடறியும் என்பதால் இத்துடன் முடிக்கிறேன்.
இத்தனை நாளும் இல்லாமல் திடீரென, பூணூலை அதிக அழுத்தத்துடம் பீறிட என்ன காரணம்? இருக்கிறது… ராம்குமார் கொடுத்துள்ள வாக்குமூலமாக ஊடகங்களில் வெளியாகியுள்ளவைதான். சமூக ஊடகங்களில் ராம்குமார் கைது குறித்து எழுந்துள்ள சந்தேகங்களும்தான்.
நியூஸ் 7ல் வெளியான செய்தியைத் தருகிறோம்:
சுவாதி கொலை வழக்கில், கைதான ராம்குமாரிடம் போலீசார் இன்று அதிகாலை வாக்குமூலம் பெற்றனர். இதில், தன்னை தேவாங்கு போல இருப்பதாக சுவாதி கூறியதால் கொலை செய்ததாக ராம்குமார் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னையில் மென்பொறியாளர் சுவாதி படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக நெல்லை மாவட்டம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை போலீசார் கைது செய்தனர். கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
மயக்க நிலையில் இருந்ததால் அவரிடம் வாக்குமூலம் பெறுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனிடையே ராம்குமாரிடம் விசாரணை நடத்துவதற்காக நெல்லை சென்ற சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறை உதவி ஆணையர் தேவராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார், நீதிமன்ற அனுமதி பெற்று செங்கோட்டை அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள ராம்குமார் இல்லத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அவரது செல்போன், பை உள்ளிட்ட பொருட்களை கைப்பற்றினர்.
இந்நிலையில் இன்று அதிகாலை மயக்கம் தெளிந்த ராம்குமாரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்ட நிலையில் சுவாதியை நேரில் சந்தித்து தனது காதலை வெளிப்படுத்திய போது தன்னை உதாசீனப்படுத்தியதாக ராம்குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும், தேவாங்கு போல தமது தோற்றம் இருப்பதாக சுவாதி தன்னை திட்டியதாகவும், அதனால் ஆத்திரமடைந்து அவரது வாயை குறிவைத்து வெட்டி கொலை செய்ததாகவும் தனிப்படை போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், சுவாதியுடன் பேஸ்புக்கில் ஏற்பட்ட நட்பின் அடிப்படையிலே சென்னை வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள ராமகுமார் தொடர்பாக அடுத்தடுத்து பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. சென்னையில் ஒரே ஊர்க்காரர் என்ற முறையில் இயக்குநரை சந்தித்து உதவி இயக்குநராகும் முயற்சியில் ஈடுபட்டிருந்நது தெரியவந்துள்ளது.
பேஸ்புக்கில் ராம்குமார் தன் காதலை சொல்ல, அதுக்கென்ன காதலிப்போம் என சுவாதி விளையாட்டு தனமாக கூறியுள்ளார். இதையடுத்தே ராம்குமார் சென்னை வந்து, உதவி இயக்குநராக முயற்சி செய்ததுடன், சுவாதிக்கும் லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார்.
கடந்த 10 நாட்களுக்கு முன் சுவாதியை நெருங்கியபோது அவர் , ராம்குமாரை செருப்பால் அடித்து அவமானப்படுத்தினார் எனவும் கூறப்படுகிறது. இதற்கு ஒரு வாரத்துக்கு முன் சுவாதியை வேறொருவர் கன்னத்தில் அறைந்து விட்டு ஓடியதாகவும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
கொலைக்கு கொலை தண்டனையாகாது என்பதே எம் நிலைப்பாடு. ராம்குமார் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அதற்கான தண்டனையை நீதிமன்றம் வழங்கட்டும். நீதி சட்டப் புத்தகத்தில் உள்ள நீதியாக இருக்கட்டும்; மனுநீதியை அமலாக்காதீர்கள்!
Reporter peru kooda illada oru post… hahaha
LikeLike
நீங்க வரிஞ்சி கட்டி ஆதரிக்கிற தினமணியே பேர் போடாமதான் எழுதுறாங்க. தினமணிங்கிற ஊடகத்துக்கு சமூகத்தின் பட்டகம் சொல்ற பதில் இது அவ்வளவுதான்.. பேர் போட்டா சாதி, மதத்தைக் கண்டுபிடிச்சு முத்திரை குத்தும் வசதி இல்லைங்கிறதால இப்படியான கேள்வி ஹா ஹா…
LikeLike