ஆடி கார், போதையில் மூன்று பெண்கள், தெருவுக்கு வந்த ஒரு தொழிலாளியின் குடும்பம்!

தரமணி அருகே மதுபோதையில் மூன்று பெண்கள் தாறுமாறாக காரை ஓட்டி தொழிலாளி ஒருவர் மீது ஏற்றியுள்ளனர். இந்த சம்பவத்தில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.

திருவான்மியூர் காமராஜர் நகரைச் சேர்ந்த முனுசாமி (45), இன்று அதிகாலை 4.30 மணிக்கு தனது நண்பர் சரவணனுடன் வேலைக்கு சென்றார். தரமணி அருகே ராஜீவ்காந்தி சாலையை முனுசாமி கடக்க முயன்றபோது ஒரு சொகுசு கார் ஒன்று வேகமாக வந்து அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் முனுசாமி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.

விபத்து ஏற்படுத்திய காரை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்று மடக்கி பிடித்தார். அப்போது காருக்குள் மூன்று பெண்கள் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து கிண்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காரில் வந்த 3 பெண்களிடமும் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சேத்துப்பட்டைச் சேர்ந்த வில்டன் ரூலன்ஸ் என்ற தொழிலதிபரின் மகள் ஐஸ்வர்யா (26) மற்றும் அவரது தோழிகள் சோனி ஜெயின், சுஸ்மா என்பது தெரியவந்தது. இவர்கள் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருவதும் தெரிந்தது.

குடிபோதையில் இருந்ததை உறுதி செய்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்திய, பின்னர் போதையில் காரை ஓட்டி வந்த ஐஸ்வர்யாவை கைது செய்தனர். காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

உயிரிழந்த முனுசாமிக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், கார்த்தி, திவ்யா என்ற குழந்தைகளும் உள்ளனர். முனுசாமியின் வருமானத்தை நம்பியே இவர்களுடைய ஜீவனம் இருந்தது.

இந்தச் செய்தி பல வெகுஜென ஊடகங்களில் நேரம் தாழ்த்தியே வெளியானது கைது செய்யப்பட்ட ஐஸ்வர்யாவின் படங்களை ஊடகங்களுக்கு காவல் துறை தரவில்லை.தமிழ் ஊடகங்கள் தொழிலதிபர் மகள் என்று மட்டும் குறிப்பிட்டன.  கார் மோதி இறந்தவரின் உடல் 2 மணி நேரத்துக்கும் மேலாக அதே இடத்தில் கிடந்தது. இந்த மூன்று பெண்களை பாதுகாப்பதில் மட்டுமே காவலர்கள் ஆர்வம் காட்டியதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் விபத்தை ஏற்படுத்தி கைதாகி சிறைக்கு அனுப்பப்பட்ட ஐஸ்வர்யா, சிறையில் ஆண் ஒருவருடன் சிரித்து பேசிக்கொண்டிருப்பதாக சமூக ஊடகங்களில் ஒரு படம் பரவி வருகிறது.

காவல்துறையின் பாரபட்ச அணுகுமுறை குறித்து கடும் விமர்சனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Karan Karki

முனுசாமி என்ற அப்பாவி மனிதனை குடிகார தறுதலைகளின் முகத்தை காட்டவே மாட்டார்கள் இந்த ஊடக நேர்மையாளர்கள் அதே இந்நேரம் முனுசாமி குடித்துவிட்டு ஐஸ்வர்யாவை மோதி கொன்றிருந்தால் சுரண்டிக் கொழுத்த ஊளைச்சதைகளின் கூப்பாடு…. கூச்சல்ன்னு.
குற்றவாளி (குடித்தது அவரோட பிரச்சனை. ) போதையில் வண்டியை நிதானமற்று ஓட்டியது, நிறுத்தாமல் விரட்டி சென்று பிடிபடும் வரை தப்ப முயற்ச்சித்தது என கொலை குற்றவாளிக்கு தண்டனை கிடைக்குமா? தொழிலதிபர் பணம் வேலை செய்யுமா? சட்டம் தன் கடமையை வேற்றுமையின்றி செய்யுமா?? கேள்விகள் பல.

Arul Ezhilan

ஆடி காரும்.. ராம்குமாரும்

மச்சி சரக்கு போட்டுட்டு ஆடி கார் ஓட்டி ஆக்சிடெண்ட் ஆச்சுல்ல அந்த ஐஸ்வர்யா படம் இருக்கா” என்று கேட்டான்.

“ஆடி கார் படம் இருக்குடா ஆடில வந்த ஐஸ்வர்யா படம் இல்ல?”

”ஏண்டா மோதிச் செத்த முனுசாமி படம் எல்லாம் வருது ஐஸ்வர்யா படம் வரல்ல அவங்க அப்பா பேர் வேற தொழிலதிபர்ணு போடுறாங்க இப்போ இப்படி எல்லாம் பேரு வைக்க ஆரம்பிச்சிட்டாங்களா?”

“எப்புடி வரும் ஐஸ்வர்யா கோடீஸ்வரி அதனால் பேரை மட்டும் சொல்லிட்டு பொண்ணை பத்திரமா புழலுக்கு அனுப்பிட்டு ஒரு படம் கூட வெளிவராம பார்த்துக்கிட்டாங்க.”

ஏழைகளை எழும்பி அடித்து நொறுக்கும் சட்டங்களும், காவல்துறையும் பணக்காரர்கள் முன்னால் மண்யிடுகிறது. ராம்குமார்களை அவர்கள் செய்த குற்றத்திற்காக எம்பி அடிக்கும் சட்டம் அதன் பின்னால் உள்ள சமூகக் காரணங்களை மறைத்து கொலைகாரன் என்ற கறுப்பு, வெள்ளையாக மட்டுமே நம் பொதுப்புத்தியில் நிறுவுகிறது.

கொல்லப்பட்ட சுவாதியும், கொலை செய்த ராம்குமாரும் இந்த தலைமுறையின் இருவேறு அடையாளங்கள்.

ராம்குமார்களால் ஏன் பொறியியல் கல்வியை முழுமையாக முடிக்க முடியாமல் போய் துணிக்கடைகளில் குறைந்த கூலிக்கு வேலை செய்ய முடிகிறது. ஏன் நகர்ப்புறங்களில் வாழும் மேட்டுக்குடிகளின் வாரிசுகளால் அதே பொறியியல் கல்வியை முடித்து லட்சக்கணக்கான ஊதியத்திற்கு ஐ.டி நிறுவனங்களில் வேலை பார்க்க முடிகிறது. சேரிக்குள் வாழ்கிறவன் முதல் தலைமுறையாக வெளி வர முயலும் பொது கையில் அறிவாளைக் கொடுப்பது எது?

Murugan Kanna

ஸ்வாதியின் சாதியும் ஐஸ்வர்யாவின் பணமும் வென்றது

ராம்குமாரின் சமுக பின்புலமும் முனுசாமியின் ஏழ்மையும் தோற்றது

சாதியத்தின் மேல் சவாரி செய்யும் முதலாளித்துவத்தின் வெற்றி

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.