ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கன்னையா குமார், தேசத்துரோக வழக்கில் கைதாகி விடுதலையான பிறகு முதன்முறையாக அவருடைய சொந்த ஊரான பீகார் மாநிலத்திலுள்ள பெஹுசராய் சென்றிருக்கிறார்.
ஊரில் உள்ள அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கு மாலை அணித்து மரியாதை செலுத்தினார். புகழ்பெற்ற கவிஞர் தின்கரின் சிலைக்கும் மாலை அணிவித்தார். இதனால் தின்கரின் சிலைக்கு தீட்டுப் பட்டுவிட்டதாகக் கூறி, ஏபிவிபி மற்றும் பஜ்ரங்கள் அமைப்புகள் இணைந்து கங்கா தீர்த்தத்தைத் தெளித்தனர்.
தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னையாகுமார் தொட்டதால், சிலை தீட்டுப்பட்டதாக அவர்கள் முழுக்கமிட்டனர்.
நீண்ட மாதங்களுக்குப் பிறகு கிராமத்துக்கு வந்துள்ள கன்னையாவை அவருடைய கிராமத்தினர் சிறப்பான வரவேற்பு அளித்துள்ள நிலையில் இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர் இந்துத்துவ அமைப்பினர்.
ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் தனது ஊருக்குச் சென்றிருந்தபோது, அம்பேத்கர் சிலைக்கும் கவி தினகர் சிலைக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். அதனால் தினகர் சிலைக்கு தீட்டுப்பட்டு விட்டதாக ஏபிவிபியினர் கங்கை நீரைத் தெளித்து தீட்டு கழித்தார்களாம்!
அம்பேத்கர் சிலைக்கும் தீட்டு கழித்தார்களோ? தெரியாது. போகட்டும்.
இந்த தினகர் யார் தெரியுமா? ராம்தாரி சிங் தினகர் இந்தியின் புகழ் பெற்ற கவிஞர். சுதந்திரப்போராட்டத்துக்காக எழுதிய கவிதைகளுக்காக தேசியக் கவி என்று போற்றப்படுபவர். சுதந்திரப் போராட்டத்துக்கும் இந்தி இலக்கியத்துக்கும் மகத்தான பங்களித்தவர் என்பதற்காக நாடாளுமன்றத்தில் அவருடைய புகைப்படம் வைக்கப்பட்டது. பத்ம பூஷண் விருது பெற்றவர். மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்.
விடுதலைப் போராட்டத்திற்காக ஆரம்பகாலத்தில் புரட்சி வழியை நாடியவர் பிற்பாடு காந்தியவாதி ஆனார். இவர் கல்லூரியில் கால் வைத்த காலத்தில்தான் சைமன் கமிஷனுக்கு எதிரான போராட்டமும், லாலா லஜபதி ராய் தடியடியால் கொல்லப்பட்டதும் நடந்தது. தினகர் புரட்சிக் கவிதைகளை எழுதினார். வங்கச் சிங்கம் ஜதீன் தாசுக்காகவும் கவிதை புனைந்தார். அவருடைய கவிதைகளின் சிறப்பே வீர ரசம்தான். மனிதாபிமானமும், முற்போக்குச் சிந்தனையும் கொண்டவர்.
ஹஜாரி பிரசாத் திவிவேதி, ஹரிவன்ஷ் ராய் பச்சன், மகாதேவி வர்மா என இந்தி இலக்கியத்தின் பிதாமகர்கள் யாரை எடுத்தாலும், அவர்கள் அத்தனை பேரும் தினகரைப் பாராட்டியிருக்கிறார்கள். அத்வானி முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் சோம்நாத் சாட்டர்ஜி வரை எல்லாரும் அவரைப் பாராட்டியிருக்கிறார்கள். பண்பாட்டின் நான்கு அத்தியாயங்கள் என் அவருடைய நூல் இந்தியா எவ்வாறு பன்முகப் பண்பாடுகள் கொண்ட நாடு என்பதை விளக்குகிறது.
சுதந்திரப் போராட்டத்துக்கும் முற்போக்குக்கும் காந்தியத்துக்கும் தொடர்பே இல்லாத ஏபிவிபி-க்கு தினகர் மீது அப்படியென்ன திடீர் காதல் வந்து விட்டது என்று வியப்பாக இருக்கிறதா?
2015இல் அவருடைய நூற்றாண்டைத் தொடங்கி வைத்தாராம் மோடி. தினகரின் ஒரு நூலைப் பற்றி பாராட்டியும் இருக்கிறார். அதுதான் தீட்டுக் கழிக்க வந்து விட்டார்கள்!
மத்தபடி தினகர் புத்தகமெல்லாம் இவனுக எங்கே படிச்சிருக்கப் போறானுக.
LikeLike