நுங்கம்பாக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட ஸ்வாதி மாற்று மதத்தைச் சேர்ந்தவரை காதலித்ததாக கூறப்படுவதாகவும் மத மாற்றம் தொடர்பான பிரச்சினையில் இருவரும் பிரிந்ததாகவும் தினமலர் நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அந்த இளைஞருக்கும் தெரியாமல் இந்த படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் தினமலர் செய்தி சொல்கிறது.
மாற்று மதத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் விசாரித்ததில் அவருக்கு எவ்வித தொடர்பும் இல்லையென்று தெரிவித்துள்ளனர். காதலித்தார்கள் என்கிற தகவலை வைத்தே சில இந்துத்துவ சிந்தனையுள்ள பிரபலங்களும் சமூக ஊடகங்களில் இயங்குவோரும் அவதூறு தகவல்களைப் பரப்பியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வட இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் ஸ்வாதியைப் பிந்தொடர்ந்ததாகவும் அது குறித்தும் போலீஸார் விசாரித்து வருவதாகவும் ஊடகங்கள் சொல்கின்றன.