ஸ்வாதி உடலைப் பார்த்த முதியவர் நெஞ்சுவலியால் மரணம்; போலீஸும் பொதுமக்களும் கண்டுகொள்ளாமல் அலட்சியம்

சென்னை சூளைமேட்டை சேர்ந்த ஆதிகேசவன்(72),  பாத்திரக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இதற்காக இவர் தினமும் காலை 8.30 மணிக்கு நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து சென்னை சென்ட்ரல்  செல்வது வழக்கம். சுவாதி கொலை சம்பவம் நடைபெற்ற போது ரயில்நிலையத்தில் சுவாதியின் உடலை பார்த்த ஆதிகேசவனுக்கு  நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

ஆனால்,  நிலை தடுமாறி கிழே விழுந்த அவர் பற்கள் உடைந்து ரத்தம் கொட்டியுள்ளது. ஆனால் அவருக்கு உடனடியாக அவசர சிகிச்சையோ, மருத்துவமனைக்கு கொண்டு செல்லவோ யாரும் முனையவில்லை. அங்கிருந்த போலீசும்கூட கண்டுகொள்ளவில்லை.

காலை 9.20 மணி வாக்கில் ஆதிகேசவனின் மகள் இவரைப் பார்த்து அவருடைய அண்ணனுக்கு போன் செய்துள்ளார். வாயில் ரத்தம் வழிய படுக்கை வைக்கப்பட்டிருந்த தன் தந்தையை மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளார் கோதண்டராமன். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உயிருக்கு போராடிய தனது தந்தையை காப்பாற்ற ரயில்வே நிர்வாகமோ, காவல் துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோதண்டரமன்  குற்றம்சாட்டுகிறார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.