ஜார்கண்ட் மாநில பாஜக தலைவர் தலா மராந்தியின் மகன் முன்னா மராந்தி 11 வயது சிறுமியை திருமணம் செய்திருக்கிறார். முன்னா மராந்தியின் திருமணம் கடந்த 27-ம் தேதி 11 வயது நடந்துள்ளது. திருமண வரவேற்பு ஜூன் 29-ம் தேதி நடைபெற்றுள்ளது. சிறுமியின் பள்ளி சான்றிதழ் படி அவருடைய பிறந்த தேதி ஜூலை 25, 2005. சிறுமிக்கு 11-வயதே ஆகிறது என்றும் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார் என்றும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே உறவுக்கார சிறுமியையே முன்னா திருமணம் செய்தாக இருந்தது. ஆனால் சிறுமியின் பெற்றோர்கள் இளம் வயதில் திருமணம் செய்து வைக்க மறுத்துவிட்டனர் என்று கூறப்படுகிறது.
இதனால் முன்னா மற்றொரு சிறுமியை திருமணம் செய்துள்ளார். உறவுக்கார பெண் மாநில பெண்கள் ஆணையத்தில் புகார் ஒன்றை கொடுத்து உள்ளார். அதில் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி முன்னா என்னை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி ரிதிஷ் குமார் பேசுகையில், சிறுமிக்கு திருமணம் நடந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்து உள்ளது. தகவல் தொடர்பாக நாங்கள் விசாரித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே ஜார்க்கண்ட் முதலமைச்சர் ரகுபார் தாசும் இந்தத் திருமண வரவேற்பு விழாவில் கலந்துக் கொள்வதாக இருந்தது, கடைசியில் கைவிடப்பட்டது என்றும் தெரியவந்துள்ளது.