நடிகர் ஒய். ஜி. மகேந்திரா தனது முகநூலில், ஸ்வாதி என்ற பிராமண பெண்ணைக் கொன்றது பிலால் மாலிக் என அவதூறு பதிவொன்றை எழுதியிருந்தார். தற்போது அந்தப் பதிவைத் தான் எழுதவில்லை என சொல்கிறார். சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் 2014 ஆம் ஆண்டு குண்டு வைத்த வழக்கில் கைது செய்யப்பட்டவர் பிலால் மாலிக். இந்தச் சம்பவத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ஸ்வாதி என்ற பெண் கொல்லப்பட்டார். நுங்கம்பாக்கம் ஸ்வாதியைப் போன்றே இவரும் ஐடி நிறுவனத்தில் பணியாற்றியவர்தான். கூகுள் சர்ச்சில் கண்ட விஷயத்தை எவ்வித ஆய்வும் செய்யாமல் நஞ்சைக் கக்கும் விதமாக ஒய். ஜி. மகேந்திரா தனது முகநூலில் எழுதிய பதிவுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
சுவாதி கொலை வழக்கில் ஒய்.ஜி மகேந்திரன் விசாரிக்கப்பட வேண்டும்.
சுவாதியின் கொலையாளி யார் என நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனுக்கு தெரிந்திருக்கிறது. காவல்துறையினர் இவரை விசாரிக்க வேண்டும். சமூகத்தில் பெரிய மனிதர்கள் என மதிக்கப்படுகிறவர்கள் உண்மைகளை மறைக்கக் கூடாது. சுவாதி கொலை வழக்கில் உயர்நீதிமன்றம் தனாக முன் வந்து வழக்கு பதிந்திருக்கும் நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகேந்திரனுக்கு அழைப்பாணை அனுப்பி விசாரிக்க வேண்டும்.
சுவாதி படுகொலை மனித தன்மையற்ற கொடூரமான செயல் என்ற வகையில் கண்டிக்கிறேன். குற்றவாளி யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
மனிததன்மை உள்ள யாராக இருந்தாலும் இதைதான் சொல்வார்கள்.
நிற்க..
அதற்காக பிராமணர் சங்கத்தில் ஆரம்பித்து சின்ன அருவாள் பெரிய அருவாள் எல்லாம் மற்ற சாதிவெறி படுகொலையின்போது கண்டித்தவர்களையும் திராவிட இயக்கத்தவர்களையும் இழிவு படுத்துவது முறையல்ல..
இன்று இவ்வாறு கேள்வி கேட்டு கொதிக்கும் பிராமணர் சங்கத்தினர் காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலில் கொடூரமாக கொல்லப்பட்ட சங்கர் ராமன் மற்றும் சாதிவெறிக்காக கொல்லப்பட்ட இளவரசன், சங்கர், கோகுல்ராஜ் உட்பட பலர் கொடூரமாக கொல்லப்பட்டபோது ஏன் கண்டிக்கவில்லை என்று கேள்வி எழுப்ப முடியும்.. ஆனால் அது இப்போது தேவையற்ற விவாதம்.
நமக்கு வந்தா ரத்தம் மத்தவனுக்கு வந்தா தக்காளிச் சட்னி என்பதுபோல் பேசுவதை நிறுத்திவிட்டு கொலைகாரன் யார் என்பதை காவல்துறையினர் கண்டுபிடிக்கும் வரை காத்திருப்போம்.
கண்டுபிடித்தப்பின்னரும் கொலையாளியின் சாதி மதத்தை வைத்து ரத்த பூமியாக்காமல், என்னகாரணத்திற்காக கொலை செய்தான் என்று கொலையாளியை மட்டும் வைத்து பிரச்சனையை பேசுவோம். அல்லது மூடிக்கொண்டிருப்பது உத்தமம்.
காவல்துறை அதிகாரிகள் மற்றும் நண்பர்களுக்கு..
உடனடியாக பைஜி மகேந்திரன் அவர்களை தூக்கிச்சென்று விசாரித்தால் சுவாதியை கொன்ற கொலைகாரன் யார் என்பதை சொல்லிவிடுவார் என்று பொதுமக்கள் பேசிக்கொள்கிறார்கள்..
உங்கள் ஆட்கள் யாராவது கொல்லப்பட்டால் அரசுத்துறைகள் விரைந்து செயல்பட்டுவிடும். அல்லது நீங்கள் யாரையாவது காலிசெய்தாலோ அத்துறை செயல்படாமலே இருந்துவிடும் (உங்கள் பள்ளியின் அலட்சியத்தால் கொல்லப்பட்ட மாணவனின் வழக்கில் நீங்கள் ஒரு ரோமத்தைக் கூட இழக்கவில்லை இல்லையா…)
இங்கே ஒரு தலித்துக்காக அரசுத்துறை தன் கடமையை செய்யவே நாங்கள் கும்பல்கூடி ஃபேஸ்புக்கில் அழவேண்டியிருக்கிறது, சாலைகளில் ஆர்பாட்டம் செய்ய வேண்டியிருக்கிறது.
நாங்கள் பலவீனமானவர்களின் குரல் சமூகத்திற்கு கேட்பதற்காக பேசுகிறோம். உங்களைப்போல சாவுக்கு அழ செத்தவனிடம் முப்புரி நூல் தட்டுப்படுகிறதா என தேடுவல்திலை.
போட்டது பெரியவா என்பதால் கொல்லப்பட்ட சங்ககரராமன் விவகாரத்தில் நீங்கள் எல்லோரும் பொத்திக்கொண்டிருந்தீர்கள். அப்போது அந்த பிராமணன் பக்கம் நாங்கள்தான் நின்றோம், இப்போதும் சங்கரராமனுக்கு நீதி வேண்டும் என நாங்கள்தான் பேசுகிறோம், அங்கே உங்கள் பிராமண பாசத்தின் சாம்பிளைக்கூட காண முடியவில்லை..
உங்கள் அழுகையில் ஸ்வாதிக்கான கவலை கடுகளவும் இல்லை, சூத்திரன் சாவுக்கெல்லாம் அழ ஆளிருக்கிறதே எனும் வயிற்றெரிச்சல்தான் வெளிப்படுகிறது, கூடுதலாக முஸ்லீம் வெறுப்பும். அந்த அழுகுரலும் ஒரு சங்பரிவார பொறுக்கியிடம் இருந்து இரவல் வாங்கியது.
பாஜகவில் பொறுப்பு கிடைக்க நீங்கள் இவ்வளவு மெனக்கெட வேண்டாம். அந்த தகுதி உங்களுக்கு பிறப்பிலேயே இருக்கிறது.
தலித்துகள், திராவிட கட்சிகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் எல்லாம் இந்துக்கள் இல்லை என அறிவிக்க உங்களுக்கு தைரியம் இருக்கா? Ygee Mahendra?
ஸ்வாதி கொலை தொடர்பாக, நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் பதிவை படிக்க நேர்ந்தது. பிராமண பெண் இறந்ததனால்தான் யாரும் இது பற்றி சரியாக கண்டுகொள்ளவில்லை. தலித் இயக்கங்கள் போராட இல்லை, திராவிட பொறுக்கிகள் எங்கே சென்றார்கள் என்கிற ரீதியில் எழுதி இருக்கிறார். தலித் மக்கள் மீது பெரும் கொடுமைகள் கட்டவிழ்த்து விடப்படும்போது, குஜராத்தில் இனக்கலவரத்தில் பலரும் உயிர் இழந்து, உடமை இழந்து இன்னமும் அந்த கொடுமையால் தவித்து வருகிறார்கள். அப்போதெல்லாம் பல ஒய்.ஜி. மகேந்திரன்கள் எங்கே போனார்கள் என்றே தெரியவில்லை.
இறந்தது ஒரு உயிர், அது பிராமண சாதி என்றாலும், வேறு என்ன சாதி என்றாலும், அதற்கு எதிராக குரல்கொடுக்க வேண்டியது, கொலைகாரனை கண்டுபிடித்து தகுந்த தண்டனை வழங்குவது நிச்சயம் நடந்தே ஆகவேண்டும். ஆனால் திடீரென இந்த பிராமணர்கள் பொங்குவது ஏன் என்று தெரியவில்லை. உங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், ஊரில் உள்ளவன் எல்லாம் குரல் கொடுக்க வேண்டும். ஊரில் வேறு யாருக்காவது ஏதாவது பிரச்சனை என்றால், நீங்கள் வீட்டில் வெங்காயப் பக்கோடா சாப்பிட்டுக்கொண்டு சங்கீதம் கேட்டுக்கொண்டிருப்பீர்களா? என்னய்யா இது ரொம்ப அநியாயமா இருக்கே. முதலில் பலருக்கும் பிரச்சனை ஏற்படுத்துவதே உங்களவா தானே யா?
இதில் இருக்கும் ஆச்சர்யம், இன்னமும் காவல்துறை கொலைகாரனை சிசிடிவி கேமராவில் தேடிக்கொண்டிருக்கிறது. இவர்கள் அவனுக்கு பெயர் வைத்து, என்ன மதம் என்பது வரை கண்டுபிடித்து இருக்கிறார்கள். இது போன்ற நேரங்களில்தான் ஊடகங்களும், காவல்துறையும், புகழ் வெளிச்சத்தில் இருப்பவர்கள் பொறுப்பாக செயல்பட வேண்டும். சில பல மாதத்திற்கு முன்னர் ஒரு பள்ளியில் ஒரு குழந்தை மரணம் என்று செய்தி வந்தது, அப்போது ஒய்.ஜி. மகேந்திரன் எங்கே வெளிநாட்டில் இருந்தார் போல, ஒருவேளை அந்த குழந்தை பிராமண குழந்தையாக இல்லாமல் இருந்திருக்கலாம்.
கருப்பு கருணா
-இப்படிக்கு காந்தியை கொல்லுமுன் “இஸ்மாயில்” என பச்சை குத்திய நல்லவர்கள்.
பிலால் மாலிக்னா தான் பிரச்சனை மத்தபடி பார்த்தசாரதியா இருந்தா சொந்த காசுல ஜாமீன் எடுத்து குடுத்துருவோம்….
மத வேறுபாடுகளை உருவாக்கி பிற வட மாநிலத்தில் வளர்ந்தது போல இங்கும் வளர இந்துத்துவம் செய்த சூழ்ச்சியோ? என எண்ணத் தோன்றுகிறது.
கொலையாளி யாரென்று தெரிந்தால் காவல்துறையினருக்கு உதவலாமே… அதைவிட்டு ஒரு பெயரை அறுதியிட்டுக் கூறியும், பிராமணப் பெண் என்பதால்தான் கொல்லப்பட்டாள் என்பது போன்ற ஒரு கருத்தை உருவாக்கவும் எப்படி துணிச்சல் வந்தது ?
இது போன்ற பதிவுகள் சுவாதிக்கும், சுவாதியை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், சுவாதிக்காக கவலை தெரிவிப்பவர்களுக்கும் செய்யும் துரோகம் என்றால் மிகையில்லை.
அன்னிக்கு எஸ்வீ சேகர் இன்னிக்கு ஒய்ஜி மகேந்திரன் அரைவேக்காட்டுத்தனமான ஆளுங்கனு நிரூபிச்சுகிட்டே இருக்காங்க பழைய ஆளுங்க…
ஸ்வாதியை கொலை செய்தது யார் என்று காவல்துறையிடம் தெரிவிக்காமல் முகநூலில் வெளிப்படுத்திய ஒய்ஜி மகேந்திரனை காவல்துறை உடனடியாக கைது செய்து தீர விசாரிக்க வேண்டும்.
கோகுல்ராஜ் , இளவரசன், சங்கர் , கல்பனா (கர்பினி பெண்) ஆகியோர் கொலை செய்யப்பட்ட போது கிராஸ் பெல்ட் குருப்பும் பார்ப்பனிய அடிமைகளான சூத்திர கூட்டமும் எங்க இருந்தீங்க மதவெறி சாதிவெறி காட்டுமிராண்டிகளா
தலித் மக்களை ஒடுக்குவது கொலை செய்வது என எல்லாம் செய்து விட்டு தலித் மக்கள் தங்களின் இழப்புகளுக்கு நியாயம் கேட்டும் தங்களின் உரிமைக்காகவும் போராடுவதை தவறாக சித்தரிக்கும் காட்டுமிராண்டிகளே