கும்பவுருட்டி அருவியில் மலபார் அணில் படும் பாடு…
கும்பவுருட்டி அருவியில் மாலை 4 மணிக்கு மேல் இரண்டு பறக்கும் அணில்கள்
மக்களைப் பார்க்க வருகின்றன. தினமும் மக்கள் அதற்கு லேஸ் பிஸ்கட், சாக்லேட் மற்றும் அனைத்து தீங்கான பொருட்களையும் வாரி வழங்குகிறார்கள். மேலும் போட்டோக்களுக்கு போஸும் கொடுக்கிறது.
அருவியில் தண்ணீர் வராத போது யார் உணவு வழங்குவார்கள்? உணவு தேடும் அடிப்படை குணத்தையே அணில்கள் இழந்துவிட்டன. வனத்துறை இதனை கண்டும் காணாமல் இருக்கிறது.
வால்பாறையில் சிங்க வால் குரங்கை இதே போல் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்க பழக்கியிருக்கிறார்கள்., காசு வாங்குவதற்காக…
வன விலங்குகளை தேர்தல் அரசியலுக்கு கூட்டி வராதீர்கள்…
முகப்புப் படம்: ஆர். ஆர். சீனிவாசன்.