விடியலை நோக்கிய காலை வேளை ஸ்வாதிக்கு அஸ்தனமாக இருக்கும் என ஸ்வாதிக்கும் தெரியாது, அவரை ரயில் நிலையம் வரை விட்டுவிட்டுச் சென்ற அவருடைய தந்தைக்கும் தெரியாது. ஆனால், அந்த அஸ்தமனத்தை எதிர் நோக்கியிருந்தது, ஸ்வாதியை இரக்கமின்றி வெட்டித்தள்ளிய ‘அந்த’ ஆண் தான். ஸ்வாதியின் சமூக வலைத்தள பக்கங்களில் அவர் காதல் வயப்பட்டிருப்பதற்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை. அந்த வயதுக்கே உரிய எதிர்ப்பார்ப்புகளைச் சொல்லும் சில சினிமா காட்சிகளின் படங்களைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார். அவ்வளவே…மற்றபடி அவர் முகநூல் அலுவலக விஷயங்களை பகடி செய்யும் பகிர்வுகளாலும், ஒரு பதிவில் அதிக மதிப்பெண் பெற்ற தங்களை இடஒதுக்கீடு எப்படி பாதிக்கிறது என்கிற மீம்ஸையும்கூட பகிர்ந்திருக்கிறார்.
இந்நிலையில் ஸ்வாதி படுகொலை செய்யப்படுவதற்கு முன், அவர் அலுவலகம் செல்வதற்காக நின்றிருந்த நுங்கம்பாக்கம் இரண்டாவது பிளாட்பாரத்தில் அவருடன் ஒரு இளைஞர் பேசியதாக அதைப் பார்த்த கடைக்காரர்கள் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்கள். இந்த பேச்சு கிட்டத்தட்ட 4 நிமிடங்கள் நீடித்ததாகவும் சொல்லியிருக்கிறார்கள். பேச்சின் முடிவில் தனது முதுகுப் பையில் வைத்திருந்த அரிவாளை எடுத்து ஸ்வாதியை வெட்டியிருக்கிறார். ஸ்வாதி கீழே சரிந்த நிலையில், அவருடைய செல்பேசியை எடுத்துக்கொண்டு ரயில்வே ட்ராக்கில் குதித்து ஓடியிருக்கிறார் கொலையாளி. இதைப் பார்த்தவர்கள் பதறிக்கொண்டே ஸ்வாதி அருகில் செல்ல, ஸ்வாதி இறந்து கிடந்தது தெரிந்திருக்கிறது.
ஸ்வாதியை யார் கொன்றிருப்பார்கள்? என ஊடகங்கள் நடத்திய விசாரணையில் அவருடைய பெற்றோரும் அவருடைய நண்பர்களும் ஸ்வாதி அமைதியான பெண்; ஆண்களுடன் அதிகம் பேசாதவர் என சொல்லியிருக்கிறார்கள். முன்பின் தெரியாத நபரிடன் வாக்குவாதம் செய்யும் தேவையும் ஸ்வாதிக்கு வந்திருக்காது, ஆகவே அந்த நபரை ஸ்வாதி நன்கு அறிந்தவராக இருந்திருக்கிறார். அப்படியெனில் ரயில் நிலையத்தில் ஸ்வாதியுடன் வாக்குவாதம் செய்த அந்த ஆண் குறித்து இவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை என்றே பொருளாகிறது.
தனக்கு பிரச்சினையிருக்கிறது, அல்லது தன்னை ஒரு நபர் பின் தொடர்ந்து பிரச்சினை தரும்விதமாக நடந்துகொள்கிறார் என்பதை ஏன் ஸ்வாதி அவர்களுடைய பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. பெற்றோருக்கும் – குழந்தைகளுக்குமான உறவு எப்படியானதாக இருக்கிறது? தம் பிள்ளைகள் உண்பது, உடுத்துவது, படிப்பது, பணிபுரிவது என அத்தனையையும் பார்த்து பார்த்து செய்து கொடுக்கும் மிடில் கிளாஸ் பெற்றோர், அவர்களுடைய மனவுணர்வுகளை, மனதை படிக்கிறார்களா?
என் மகளை நான்கு வேதங்களின்படி கட்டுக்கோப்பாக வளர்க்கிறேன் என சொல்லுவதும், அதையும் சில ஊடகங்கள் பெருமையுடன் பதிவு செய்வதும் பார்ப்பனர் வீட்டுப் பெண் குற்றச்சம்பவங்களில் தொடர்புபடுத்தும்போது மட்டும் தவறாமல் பதிவாகிறது. நாமக்கல்லில் ஆணவக் கொலையான சுமதியும் உடுமலைப் பேட்டையில் கணவனைப் பறிகொடுத்து உயிர் தப்பிய கவுசல்யாவும்கூட கட்டுக்கோப்பாக வளர்க்கப்பட்டவர்கள். எந்த ‘ஒழுக்கமீறலை’ காரணம் காட்டி கவுசல்யா போன்ற சாதி மறுப்புத் திருமணம் செய்த பெண்களை சாதிய சமூகம் துரத்தியதோ அதே சாதிய சமூகம் ஸ்வாதிக்கும் ‘ஒழுக்க’ அடையாளங்களைக் காட்ட முயற்சிக்கிறது.
ஸ்வாதி உயர்சாதியில் பிறந்தவர் என்பதாலேயே ‘ஒழுக்க’ கோட்டை மீறியிருக்க மாட்டார் என வலிந்து எழுதுவது காதலிக்கும் பெண்களையெல்லாம் ‘ஒழுக்கக் கேடானவர்கள்’ என தானாகக் கூண்டில் நிறுத்திவிடும். உண்மையில் இந்த ‘ஒழுக்க மதிப்பீடுகள்’ தான் ஸ்வாதியை தன்னைத் துரத்திவரும் அந்த ஆணின் செயல்களை வெளியே சொல்லாமல் மூடி மறைக்க வைத்திருக்கக்கூடும். ‘எங்கள் வீட்டுப் பெண்கள் அப்படி செய்யமாட்டார்கள்’ என சொல்லிச் சொல்லியே ‘ஒழுக்க மதிப்பீடுகள்’ எனும் கழுவில் ஏற்றில் கொன்று கொண்டிருக்கிறார்களோ எனவும் தோன்றுகிறது.
தன்னை ஒருவன் தொந்திரவு செய்கிறான் என்பதை வெளிப்படையாகச் சொல்லியிருந்தால் பெற்றோர் எங்கே தன் மீதே குற்றம் சுமத்துவார்களோ என்கிற அழுத்தமும்கூட ஸ்வாதியைத் தடுத்திருக்கலாம்.
ரயில் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்கிற குற்றச்சாட்டு முதன்மையானதாக வைக்கப்படுகிறது. சிசிடிவி கேமரா இருந்தால் குற்றம் பதிவாகியிருக்கும். அது சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகியிருக்கும். தமிழக அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்று சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவித்த அடுத்த நாளே அடுத்தடுத்து கொலைகள் விழுகின்றன. தமிழகத்தின் தலைநகரான சென்னையிலேயே சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது என்ற அவலத்தோடு, சக உயிரியின் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்திய அந்த ஆணின் சமூக வளர்ப்பு எத்தகையாக இருக்கிறது என்பதையும் நாம் கேள்விக்குட்படுத்த வேண்டும்.
பெண்ணின் மீது திணிக்கப்படும் ‘ஒழுக்க மதிப்பீடுகள்’ தானே இத்தகைய கொலைகளை ஆண்களைச் செய்யத்தூண்டுகிறது. திணிக்கிறவர்கள், பின்பற்றச்செய்கிறவர்கள், அதையே விதியாக எடுத்துக்கொண்டு செயல்படுகிறவர்கள் என எல்லோருமே ஆண்களாகவே இருக்கிறார்கள். உயர்சாதியில் பிறந்தார் என்பதற்காக அதே ஒழுக்கமதிப்பீட்டைத் தூக்கிப்பிடிக்கும் ஊடகப் பெண்களின் எழுத்துக்கள் அவலத்தின் உச்சம்.
உங்களின் பதிவில் தான் சாதிய தாக்கு இருக்கிறது. கொளைக்கான காரணத்தை நீங்கள் வேறு விதமாக சாதி ரிதியான மறைமுக தாக்கே . எல்லா பெற்றோர்க்கும் தன் பில்லை நல்லவர்கள் தான் இதில் ஜாதி வித்தியாசம் இல்லை. உங்களின் சாதி வன்மம் தான் உங்கபதிவில் தெரிகிறது.
LikeLike
see this also…
LikeLike
இந்த கருமத்தை எழுதறதுக்கு பதிலா, “பாப்பாத்தி தான செத்தா, சாவட்டும்” அப்படின்னு எழுதிட்டு போயிருக்கலாம். த்தூ.
LikeLike
பார்ப்பனர் என்று குறிப்பிட்டுள்ளிர்கள் இதே மற்ற சமுதாயப் பெயர்களை குறிப்புட்டு கட்டுரை எழத முடியுமா???
LikeLike
தேவர், கவுண்டர் சாதி வெறித்தனங்களைச் சுட்டி இந்தத் தளத்தில் ஏராளமான பதிவுகள் உள்ளன. நேரம் கிடைத்தால் பார்க்கவும்.
LikeLike
see this fuck…
http://www.vinavu.com/2013/01/18/vanniyar-casteism-kills/
LikeLike
// ஸ்வாதி உயர்சாதியில் பிறந்தவர் என்பதாலேயே ‘ஒழுக்க’ கோட்டை மீறியிருக்க மாட்டார் என வலிந்து எழுதுவது காதலிக்கும் பெண்களையெல்லாம் ‘ஒழுக்கக் கேடானவர்கள்’ என தானாகக் கூண்டில் நிறுத்திவிடும். //
// ஒழுக்க மதிப்பீடுகள் ஏன் வலிந்து திணிக்கப்படுகின்றன? //
இப்படி எழுதுவதன் மூலம் எதை வைத்து அந்தப் பெண் ஒழுக்க கேடானவள் என்று திணிக்க முயலுகிறீர்கள் என்பது புரியவில்லை. பாதிக்கப்பட்டது கவுசல்யா, சுமதி பொன்றவர்களைப் போலவே ஸ்வாதியும் பரிதாபத்துக்கு உரியவர் என்பதை மனதில் கொள்ளுங்கள். இவர்கள் சக உயிரிகள், மனிதர்கள், பெண்கள் என்றே பார்க்க பழகிக் கொள்ளுங்கள். மாறாக சாதி மதப் பார்வை வேண்டாம். உங்களுக்கு கற்பனைத்திறன் இருந்தால் புனைவு எழுதி புகழ் பெறவும். மாறாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சங்கடப் படுத்தும் படி எழுதி குளிர் காய வேண்டாம்
LikeLike
ஒழுக்கம் பற்றிய பெற்றோரின் அழுத்தம் காரணமாகி இப்படி நேர்ந்திருக்கலாம்! – என்ற கருத்து எண்ணிப்பார்க்கவேண்டிய ஒன்றாகும். ஒழுக்கம் பற்றிய அறிவு புகட்டல் தேவையில்லை என்ற பொருளில் இதை ஏற்பது மக்களினத்திற்குக் கேட்டையே விளைவிக்கும். இந்த நிலையை நுட்பமாக்க கையாண்டு பிள்ளைகளை (ஆண் பெண் இருபாலரையும்) நெறிப்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமையாகும் . குமுகாயமும் அரசும் இதற்கு எல்லா வகையிலும் துணையிருக்க வேண்டும்!
LikeLike