பூவுலகின் நண்பர்களுக்கு கூடங்குளம் மட்டும்தான் சூழலியல் பிரச்சினையா? யானைகளுக்காகவெல்லாம் போராட மாட்டார்களா?

Arun Mo

அருண்
அருண்

காளை சண்டையை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று வெற்றியடையும் தயிர் சோறு க்ரூப், எல்லாம் ஏன் யானையை வைத்து இத்தனை அராஜகம் செய்யும் அரசாங்கத்தையும், கார்ப்பரேட் சாமியார்களையும், கல்லூரி நிறுவனங்களையும் எதிர்த்து வாய்த்திறப்பதே இல்லை. ஒருவேளை காளை சண்டை கூட கார்ப்பரேட் சாமியார்களின் ஆசிர்வாதத்துடன் நடந்திருந்தால் எந்த வித எதிர்ப்பும் வந்திருக்காது என்றே நினைக்கிறேன். காளை சண்டையை நடத்தும் அமைப்புகள் எல்லாம், சட்டப்பூர்வ அனுமதியை எதிர்பாராமல், கார்ப்பரேட் சாமியார்களை இதில் இணைத்துக்கொண்டால் அடுத்த காளை சண்டை நடப்பதற்கான எல்லா வழிமுறைகளும் பிறக்கும்.

ஒரு யானை என்பது ஒரு காட்டினை அதன் செழுமை மாறாமல் நிர்வாகிக்கும் மிக பெரிய நிர்வாகி. ஒரு யானை இறந்தால் ஒரு காடு அழியும் என்றொரு ஆப்பிரிக்க பழமொழி இருக்கிறது. ஒரு காடு அழிந்தால் அதனை சுற்றியுள்ள கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள், மற்ற விலங்குகள், பறவையினங்கள் என மொத்தமாக உயிர்க்கோளமே ஆட்டம் கண்டு விடும். நாம் யானையின் தேவை தெரியாமல் அதனோடு விளையாடிக் கொண்டிருக்கிறோம். யானையின் குணம், அதன் மரபணுவில் போதித்து வைக்கப்பட்டுள்ள வலசை பாதைகளை நாம் ஆக்கிரமித்துக்கொண்டு, யானைகளை கொன்றுக் கொண்டிருக்கிறோம்.

சமீபத்தில் ஜங்கிள் புக் என்றொரு படம் உலகம் முழுக்க பெரும் வரவேற்பை பெற்று இன்னமும் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படத்தில் வரும் காட்சி, யானையைக் கண்டதும் வணங்கி நன்றி சொல்வது. மனிதர்கள் யானைகளுக்கு நன்றி சொல்லாவிடிலும் பரவா இல்லை, தயவு செய்து அதனை கொள்ளாதீர்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தாங்களாகவே முன்வந்து இதுகுறித்த பொதுநல விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் பூவுலகு என்றொரு அமைப்பு இருக்கிறது, இது போன்ற நேரத்தில்தானே முக்கியமாக அவர்களின் பங்களிப்பு இருக்க வேண்டும். கூடங்குளத்தை பன்மடங்கு ஆபத்து வாய்ந்தது யானைகளை கொள்வது. ஒரு யானைதானே, என்று நாம் அஜாக்கிரதையாக இருந்துவிட முடியாது. இப்படி மாதத்திற்கு இரண்டு யானைகளை கொன்று குவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

யானைகளை காக்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை. காரணம், அதில்தான் உணவு சங்கியிலின் முக்கியமான பிணைப்பு இருக்கிறது.

அருண், திரை செயற்பாட்டாளர்; பேசாமொழி இதழின் ஆசிரியர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.