ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்து பிரிவதாக ஓட்டெடுப்பு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சம கால உலக அரசிலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்படுகிறது. உலகமயமாக்கலுக்கு விழுந்த அடியாக இதை பொருளாதார நிபுணர்கள் கணிக்கிறார்கள்.
ஐரோப்பிய யூனியனில் தொடரலாமா? வெளியேறலாமா? என பிரிட்டனில் வாக்கெடுப்பு நடந்தது. வாக்கெடுப்பு முடிவுகளின்படி 52% மக்கள் வெளியேறவும் 48% மக்கள் தொடரவும் வாக்களித்துள்ளனர். இதனால் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறியது பிரிட்டன்.
வாக்கெடுப்பு முடிவு குறித்து இங்கிலாந்தின் UKIP தலைவர் நைஜல் ஃபரேஜ், “இது சாமானியர்களின் வெற்றி” என கருத்து தெரிவித்துள்ளார்.
“பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராக நாம் போராடினோம்; பெரும் வணிக வங்கிகளை எதிர்த்தோம். பெரும் அரசியலுக்கு எதிராகவும், பொய்களுக்கு எதிராகவும் ஊழலுக்கு எதிராகவும் நம்முடைய நேர்மையும் உண்மையும் நாட்டின் மீது நம்பிக்கையும் கொண்ட நாம் வெல்லப் போகிறோம். நாம் இதை எவ்வித போராட்டமும் இன்றி நாத்தியமாக்கியிருக்கிறோம், ஒரு குண்டு கூட வீணாகமல் இதை சாதித்திருக்கிறோம்” என ஃபரேஜ் தெரிவித்தார். முன்னதாக ஃபரேஜ், ஐரோப்பிய யூனியன் ஒரு தோல்வியடைந்த திட்டம் என பேசியிருந்தார்.
இந்நிலையில் பவுண்டின் மதிப்பு 1985ஆம் ஆண்டுகளில் இருந்ததைவிட கீழே சென்றிருக்கிறது.