பாஜக தென்சென்னை மாவட்ட மகளிரணித் தலைவர் ரமாவின் அரசியல் நாகரிகம் தாழ்ந்த தரத்தில் இருக்கிறது. உதாரணமாக நீச்சல் உடையில் இருக்கும் ஒரு பெண்ணின் படத்தைப் போட்டு அதை சோனியா காந்தி என சொல்லி இவரெல்லாம் எப்படி ஒரு கட்சியின் தலைவரானார் என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.
சமீபத்திய பதிவில் “மாமா வளவா” என்று விளித்து தொல் திருமாவளவன், நோன்பிருப்பது குறித்து அவதூறான பதிவொன்றை எழுதியிருக்கிறார்..
மாமா வளவா,
யாரை ஏமாற்ற இந்த நாடகம்…
தொழுகையின் போது தலையில் குல்லா இல்லாவிட்டால் கூட கைகுட்டையை கட்டியாவது தொழுவாா்கள், இது கூட தெரியாத நீ எப்படியா இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாய் ? ?
இஸ்லாமியா்களை ஏமாற்றவா ?
இல்லை, தலீத்களை ஏமாற்றவா ? ?
கட்சியின் அனுதாபிகள், பெயர் வெளிப்படுத்தாதவர்கள் இப்படியான அவதூறு பதிவுகளை எழுதுவது வழக்கம். கட்சி பொறுப்பில் இருக்கக் கூடியவர் இப்படி எழுதியிருப்பதாக பலர் சமூக ஊடகங்களில் கடுமையான எதிர்த்து வருகின்றனர்.
அது தொழுகை அல்ல, தியானம் செய்கிற படம்:
பாஜகவின் “தரம்” இதுதானே! இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை! தமிழை “நீசமொழி” என்றவர்கள் தானே! பெரியாரை இழிவாக பேசியவர் எச்.ராஜா; இந்த ராமா வின் தரம் அந்த ராஜா வின் தரத்தோடு ஒத்து போகுதல்லவா? “டியர்” அழைத்ததற்கு அந்த ராணி சீறினார் அல்லவா? இதற்கு என்ன சொல்ல போகிறது பாசக வும், அந்த ராணி அம்மையாரும்? பாஜக வர வர தன் சுயரூபத்தை வெளிச்சமிட்டு வருகிறது. இதன் இத்தகைய போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது!
LikeLike