By Meetu Jain with Ushinor Majumdar
‘எஸ்ஸார் டேப்ஸ்’ பெருமுதலாளிகள் இந்திய நீதித்துறையை, நாடாளுமன்றத்தை, வங்கிகளை, போட்டியாளர்களை, நிர்வாகிகளை எப்படி கையாண்டார்கள் என்பது குறித்து பயமுறுத்தும் உண்மையைச் சொல்கின்றன. ராடியா உரையாடல்களுக்கு பத்தாண்டுகளுக்கு முன்பே அரசாங்கம் எப்படியான மோசடிகளில் ஈடுபட்டது என்பதையும் இது காட்டுகிறது.
முந்தைய பதிவை இங்கே படிக்கவும்: ராடியாவுக்கு முன்பே வாஜ்பாயி ஆட்சியில் இந்திய குடியரசு விற்பனைக்கு வந்தது; அதை வாங்கியது ரிலையன்ஸ்!
எஸ்ஸார் ஒட்டுக்கேட்பு விவகாரத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தவரான உபால், இந்த ஆண்டு மார்ச் மாதம், சட்ட விதிகளை மீறியதாக எச்சரிக்கை அறிக்கையை எஸ்ஸார், ரிலையன்ஸ் நிறுவனங்களுக்கு அனுப்பியிருக்கிறார். அதற்குப் பிறகு, பிரதமருக்கு இந்த டேப்புகளை அனுப்பி வைத்திருக்கிறார். கான் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு இவர்கள் என்ன பதில் வைத்திருக்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ளவும் அரசு ஏஜென்ஸிகள் கானுக்கு ஒட்டுக்கேட்பு அதிகாரத்தை அளித்துள்ளதாக என்பதைத் தெரிந்துகொள்ளவும் இந்த அறிவிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.
ரிலையன்ஸ் நிறுவனம் இதைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்திருக்கிறது. சில காலம் அமைதியாக இருந்த எஸ்ஸார், மகேஷ் அகர்வால் என்ற வழக்கறிஞர் மூலம், இந்த குற்றச்சாட்டுகள் ஜோடிக்கப்பட்டவை, மிரட்டல் தன்மை கொண்டவை என்று தெரிவித்தது. “இந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றால், ஏன் ஒருவர் பணம் பறிக்கும் நோக்கத்துடன் ஈடுபட வேண்டும்”.
தலைமையில் நிலையில் உள்ள எஸ்ஸார் அலுவலர்கள், இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்றும் இவையெல்லாம் எஸ்ஸார் பதிவு செய்தவைதானா என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது; எங்களுடைய நிறுவனத்தை வீழ்த்த நடக்கும் முயற்சி இது எனவும் தெரிவித்துள்ளனர்.
2011-ஆம் ஆண்டு எஸ்ஸாரும் அனில் திருபாய் அம்பானி குழுமமும் 2 ஜி முறைகேட்டில் ஈடுபட்டது வெளிவந்தது. இந்நிலையில், வாஜ்பாயி ஆட்சிக் காலத்தின் உரையாடல்கள் மட்டும் ஏன் தற்போது வெளிப்பட்டுள்ளது என்பது பலரிடமும் தோன்றியுள்ள கேள்வி.
“2000களின் ஆரம்ப காலத்தில் ரிலையன்ஸ் பீபிஎல் நெட்வொர்கைப் பயன்படுத்தியது. இந்த உரையாடல்கள் மும்பையில் பீபிஎல்லைப் பயன்படுத்தியும் டெல்லியில் ஹட்ச் நெட்வொர்க்கைப் பயன்படுத்தியும் பதிவு செய்யப்பட்டன. ரிலையன்ஸ், நெட்வொர்கை மாற்றிக்கொண்ட போது அவர்களால் பதிவு செய்ய இயலவில்லை” என்கிறார் உபால்.
ரிலையன்ஸ் அப்போதுதான் தொலைத் தொடர்பு துறையில் காலடி எடுத்து வைத்திருந்தது. அப்போதே அவர்கள் அரசாங்கத்துக்கு ஆணைகளை இட ஆரம்பித்துவிட்டார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
பிரதமருக்கு அனுப்பப்பட்ட புகாரில் சில துளிகள்
- பரிமால் நத்வாணிக்கும் சதிஸ் சேதிக்கும் நடந்த துல்லியமான உரையாடலில், அரசுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல்லுக்கு கட்டண திட்டங்களைப் போட்டுக் கொடுத்ததும் அதன் மூலம் ரிலையன்ஸுக்கு லாபம் அதிகரித்ததும் உறுதியாகத் தெரிகிறது.
- முகேஷ் அம்பானிக்கும் சதிஸ் சேதிக்கும் நடந்த உரையாடலில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக பிரமோத் மகாஜனை நீடிக்க வைக்க முதலமைச்சர்களிடமிருந்து 4-5 கடிதங்களையும் எம்பிக்களிடமிருந்து 8-10 கடிதங்களை எழுதி வாங்கும்படி அம்பானி சொல்கிறார்.
- முகேஷ் அம்பானிக்கும் சதிஸ் சேதிக்கும் நடந்த உரையாடலில் அம்பானி, COAI (Cellular Operators Association of India) உடைக்கும்படி சொல்கிறார். மேற்கொண்டு அம்பானி இந்தக் கூட்டமைப்பை உடைக்க ராஜிவ் சந்திரசேகருக்கு 100/200 கோடி கொடுக்கலாம் என்கிறார்.
- 22.11.2002 அன்று முகேஷ் அம்பானிக்கும் சங்கர் அத்வாலுக்கும் நடந்த உரையாடலில் தொலைத் தொடர்பு லைசென்ஸுக்காக செலுத்த வேண்டிய ரூ. 1300 கோடியை சேமிக்க, அந்தத் துறையிலிருந்து ஒரு கோப்பை நீக்க வேண்டும் என்று சொல்கிறார். அதன்படி தொலைத்தொடர்பு அதிகாரிகள் அஜோய் மேத்தா, அஜெய் சிங் உதவியுடன் அந்தக் கோப்பு நீக்கப்படுகிறது.
- 16.08.2002 அன்று சதீஸ் சேத்திக்கும் வியாஸுக்கும் நடந்த உரையாடலில், அப்போது தொழில்துறை மற்றும் சட்ட அமைச்சராக இருந்த ரவிசங்கர் பிரசாத், ரிஷப்ஷன் கமிட்டியின் தலைமையேற்க விரும்புவதாக தான் கேள்விப்பட்டதாக தெரிவிக்கிறார் வியாஸ். அந்த உரையாடலில் மேற்கொண்டு, TDSAT தொடர்பான COAIன் சிறப்பு மனுவை தள்ளுபடி செய்ததற்காக உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவ(பெயர் வெளிப்படுத்தி பேசவில்லை)ருக்கு ரூ. 2 கோடி தரப்பட்ட தகவல் பரிமாறிக்கொள்ளப்படுகிறது.
மோடி தலைமையிலான அரசு பதவியேற்றவுடன் எஸ்ஸார் இரண்டாவது முறையாக தவறாக தகவல்களுக்காக செய்திகளில் இடம்பிடித்திருக்கிறது. பிப்ரவரி 2015-ஆம் ஆண்டு மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், எஸ்ஸார் நிறுவனம் உயர்மட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊடகங்களை வளைத்து தங்களுக்கு ஆதாயம் தேடிக்கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார். முன்னாள் பாஜக தலைவரும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் மேற்கொண்டபோது எஸ்ஸாருக்கு சொந்தமான சொகுசு கப்பலில் சலுகைகள் பெற்றார் என்று அவுட்லுக் எழுதியிருந்தது. இந்தக் குடியரசு அப்போதும் இப்போதும் விற்பனையில் தான் இருந்துகொண்டிருக்கிறது.
நன்றி: அவுட்லுக்