சமஸ்கிருதம் குறித்து திமுக பேச வேண்டிய அவசியம் இல்லை என்று பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார்.
மதுரை பீ.பீ.குளத்தில் வருமான வரி அலுவலகம் எதிரே மதுரை மாநகர் மாவட்ட பாஜக சார்பில் மக்கள் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம் மையத்தை கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்கள் “சமஸ்கிருதத்தை திணித்தால் கிளர்ச்சி ஏற்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியது பற்றி கேள்வி கேட்டனர்.
அதற்க்கு பதில் அளித்த இல.கணேசன் “மொழி அறிஞர்கள், இலக்கியவாதிகளால் தொன்மையான மொழி என சமஸ்கிருதம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. சிவபெருமானின் உடுக்கை ஒலியில் இருந்து பிறந்தது தான் தமிழும், சமஸ்கிருதமும். சிவனையே ஏற்காதவர்கள், இதைப் பற்றி பேசாமல் சிவனே என்று இருப்பது தான் நல்லது” என்று கூறினார்.