கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் “இயல் விருது” 2015 அறிவிப்பு…!

கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வருடா வருடம் வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருது (இயல் விருது) இம்முறை தமிழ் விக்கிப்பீடியா என்னும் இணையத்தளக் கலைக்களஞ்சிய கூட்டாக்கத் திட்டத்தை தொடங்கி வெற்றிகரமாக இயக்கிவரும் இ.மயூரநாதன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 17வது இயல் விருது ஆகும்.

*”கண்டிவீரன்” என்ற சிறுகதை தொகுப்பிற்காக 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் “புனைவுப் பரிசு”ஷோபா சக்திக்கு வழங்கப்படுகிறது.

*தமிழ் இலக்கிய உலகின் பிதாமகனான, அசோகமித்ரனின் “குறுக்குவெட்டுக்கள்” என்னும் கட்டுரை தொகுப்பிற்கு, 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் “அபுனைவுப் பரிசு” அளிக்கப்படுகிறது.

*”மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது” என்ற கவிதை தொகுப்பிற்காக 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் “கவிதை பரிசு”,   குமரகுருபரனுக்கு தரப்படுகிறது.

*தேவிபாரதியின் சிறுகதைகளை “farewell mahatma” என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கும் ந.கல்யாணராமனுக்கு 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் “மொழிபெயர்ப்பு பரிசு” வழங்கப்படுகிறது.

இதனிடயே விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

Indran Rajendran

*”மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது” என்ற கவிதை தொகுப்பிற்காக 2015-ம் ஆண்டின் தமிழ் இலக்கிய தோட்டத்தின் “கவிதை பரிசு”, குமரகுருபரனுக்கு தரப்படுகிறது.வாழ்த்துக்கள் கவிஞர் குமரகுருபரன்

கே. என். சிவராமன்
2015ம் ஆண்டுக்கான ‘இயல்‘ விருது பெறும் நண்பர்கள் Shobasakthi Antonythasan ஷோபா சக்தி, குமரகுருபரன் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அன்பு முத்தங்கள்


Chandra Thangaraj

எனக்கு பிடித்த படைப்பாளிகள், என் அன்புக்குறியவர்கள் விருது வாங்குவது மிக மகிழ்ச்சியளிக்ககூடியதாக இருக்கிறது. என் நண்பனும் எனக்கு பிடித்த கவிஞருமான Kumaragurubaran Jayaraman க்கு கனடா இலக்கியத் தோட்டம் வழங்கும் கவிதைக்கான “இயல்” விருது கிடைத்திருப்பதில் பெரு மகிழ்ச்சி.போலவே அண்ணன் Shobasakthi Antonythasan புனைவிற்கான இயல் விருது கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி.

Vinayaga Murugan

நண்பர் கவிஞர் குமரகுருபரன் மற்றும் ஷோபா சக்திக்கு வாழ்த்துகள்

Abdul Hameed Sheik Mohamed 
உயிர்மை வெளியிட்ட குமர குருபரனின் ‘மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பிக்க முடியாது” தொகுப்புக்காக ‘இயல்’ விருது கிடைத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ‘ முன்னர் அதீதத்தின் ருசி’ தொகுப்பிற்காக நானும் அந்த விருதை பெற்றிருக்கிறேன்.

குமரா..வா..ஆரம்பிக்கலாம் எல்லாவற்றையும் மறுபடியும் முதலில் இருந்து…உற்சாகமாக இரு..

இயல் விருது பெறும் தமிழ் இலக்கியத்தின் ராக் ஸ்டார் ஷோபா சக்திக்கும், நண்பரும் கவிஞருமான குமர குருபரனுக்கும் என் அன்பும் வாழ்த்துக்களும். அசோகமித்திரனை வாழ்த்தும் வயது எனக்கில்லை. அவர் விருது பெறுவதில் நான் அடையும் மகிழ்ச்சியை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். அசோகமித்திரன் தனது சிறுகதையில் வரும் புலிக்கலைஞனைப் போன்றவர். ஆடி அனைவரையும் பிரமிக்க வைத்து விட்டு அமைதியாய் கைகட்டி ஓரமாய் அமர்ந்து கொள்வார். இவ்விருதையும் அவர் ஒரு சின்ன அலுப்புடன் நெற்றியை சுருக்கி ஏற்பார் என நினைக்கிறேன்.


இயல் வாழ்நாள் விருது பெற்றவர்கள் இதுவரை:

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.