‘பட்டியல்’ வெளியாகும் போதெல்லாம் சர்ச்சைகளும் சேர்ந்து கொள்கின்றன. சென்னை புத்தகக் கண்காட்சியை ஒட்டி ஸ்ருதி டிவி தமிழின் நம்பிக்கைக்குரிய இளம் எழுத்தாளர்கள் யார் என்று எழுத்தாளர்களிடமே கேட்டுள்ளது. அதற்கு பிரபல எழுத்தாளர்களின் பதில்கள் இந்த வீடியோவில்…
இந்தப் ‘பட்டியல்’ வீடியோ குறித்து முகநூலில் இலக்கியவாதிகளிடையே விவாதங்கள் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளன…
என்னளவில் நம்பிக்கையளிக்கக் கூடிய இளம் ஒழுத்தாளர்கள் யாருன்னா க.நா.சு, சி.சு.செல்லப்பா, புதுமைப்பித்தன், அப்றம் அவர் யாரு ம்ம்ம்ம்ம் மெளனி.
யாரோ மைக்கை வந்து நீட்டுகிறார்கள். அல்லது ஒரு பத்திரிகையின் இலக்கிய ’பீட்’ ரிப்போர்ட்டர் வழி மறிக்கிறார். யாராவது நாலு பெயரை சொல்லுங்கள் என்கிறார்கள். நாமும் அந்த நேரத்திய மன நிலையிலிருந்து இரண்டு பெயர்களை சொல்கிறோம். அது மதிப்பீடு கருதியோ உறவு கருதியோ அன்பு கருதியோ இருக்கலாம். அந்தப் பட்டியல்கள் எதுவும் இலக்கிய சூழல்குறித்த குறைந்த்த பட்ச மதிப்பீடு கூட அல்ல. அவை தற்சார்பானவை, தற்காலிக மனநிலைகொண்டவை. ஒரு புத்தக்க் கண் காட்சியில் எத்தனை புதிய எழுத்தாளர்கள் வந்திருக்கிறார்கள் என்பதோ எனன புத்தகங்கள் வந்திருக்கின்றன என்பதோ பட்டியலிடும் எவருக்கும் தெரியாது. அவர்கள் கையில் இருக்கும் புத்தகங்கள்தான் மொத்த இலக்கிய சூழலுக்கான அள்வுகோலா? ஆனால் எப்போதும் இலக்கியச் சூழல் இபபடித்தான் இயங்கி வந்திருக்கிறது சிலருக்கு சிலரை பிடிப்பதன் வழியாகத்தான் மொத்த படைப்பியக்கமும் நிகழ்கிறது.
யாரோ ஒருவர் சிலரால் அங்கீகரிக்கப்படுகிறார் என்றதும் ஏன் இவ்வளவு பெரிய பதட்டம் அடைய வேண்டும்.? எதையும் படிப்பத்திலை, எதையும் மதிப்பீடு செய்வதில்லை. ஆனால் வெறும் பட்டியல்களை மட்டும் வைத்து எவ்வளவு கூச்சல்? யாரெல்லாம் இந்த்தக் கூச்சலில் ஈடுபகிறவர்கள் என்று பார்த்தால் ஒன்று இருபோதும் எந்தபட்டியலிலும் வரமுடியாதவர்கள், அல்லது எந்தத பட்டியலலையும் போடுவதற்கான ஆளுமையற்றவர்கள்,