பவா செல்லதுரை ‘செம்மலர்’ இதழில் எழுதியிருக்கும் கட்டுரையில் கவிதைக்கான இலக்கணம் குறித்து சொல்லப்பட்ட கருத்துக்கு இடதுசாரி எழுத்தாளர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
எழுத்தாளரும் பேராசிரியருமான அருணனின் முகநூல் பதிவு இது:
பவா வின் கவிதைக்கான இலக்கணம் நியாயமானது அல்ல
நாடகக் கலைக்கு பிரளயன் அளித்துள்ள பங்களிப்பு பற்றி ஓர் அழுத்தமான கட்டுரை எழுதியிருக்கிறார் பவா செல்லதுரை “செம்மலர் “ஏட்டில். ஆனால் போகிற போக்கில்
கவிதைக்கு அவர் தந்திருக்கிற இலக்கணம் நியாயமானது அல்ல. எந்தவொரு இலக்கிய வடிவமும் நவரசங்களுக்கும் சொந்தமானதே. அதிலும் ரவுத்திரம் பழக கவிதை மிகவும் பாந்தமானது. ஆனால் பவாவிற்கோ இடதுசாரி கவியரங்குகளில் மொழியப் பட்டவை கவிதைகளாகவே தெரியவில்லை! “நான்கூட பல தனியான தருணங்களில் தணிகைச்செல்வன் மாதிரி கந்தர்வன் மாதிரி கவிதைகளை ஏற்ற இறக்கங்களோடு சொல்லிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் உள்மனது சொல்லும் இவைகள் கவிதைகள் இல்லை, உரத்துச் சொல்லப்படும் வார்த்தை அடுக்குகள் என்று. கவிதைகள் மிக அந்தரங்கமான வாசிப்புக்கு உட்படுத்த வேண்டியவைகள்” என்கிறார் அவர்.
இந்த வரையறைப்படி பார்த்தால் பாரதியின் கவிதைகள்கூட கவிதைகள் ஆக மாட்டா. அவரும் கடற்கரையில் அமர்ந்துகொண்டு தனது கவிதைகளை ஏற்ற இறக்கங்களோடு சொல்லிப்பார்த்துக் கொண்டவர்தான். அநீதிகளுக்கு எதிராக மனிதர்களை ஆவேசம் கொள்ள வைப்பவைகளை கவிதைகளே இல்லை எனச் சொல்வது சமுதாய மாற்றம் வேண்டாம் என நினைப்பவர்களின் இலக்கிய கோட்பாட்டிற்கு பலியாவதாகும்.
அந்தரங்க வாசிப்பிற்குரியதும் வரட்டும், களப்போராட்டத்திற்கு உத்வேகம் தருவதும் வரட்டும். அன்று அடிைம ஆட்சிக்கு எதிராக பாரதி பாடியதும் , பின்பு அவசரநிலை ஆட்சிக்கு எதிராக தணிகைச்செல்வன் பாடியதும் கவிதை இல்லை என்றால் அந்தக் கவிதைக் கோட்பாடு எமக்கு வேண்டவே வேண்டாம்”.
எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா , தனது முகநூலில்,