பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படத்தின் பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. படத்தின் பாடல் ஒன்றில் ‘ஆண்டைகளின் கதை முடிப்பான்’ என்ற வரி வருகிறது. இந்த வரிகளுக்காக பா. ரஞ்சித்தை அவருடைய சாதி சார்ந்து இழிபடுத்தி வருகின்றனர் முகநூல் சாதியவாதிகள் சிலர்.
ஒருவர் ரஞ்சித்தின் இனிஷியலுக்கு புது விளக்கம் சொல்ல; இன்னொருவர் திருமவளவன், கபாலிக்கு வசனம் எழுதியதாக பகடி செய்கிறார்.
“நீங்க நண்டு வறுக்கிறவங்க” என ஏளனத்துடன் மீம்ஸ் போடுகிறார் இன்னொருவர்.
சாதி முகம் நாளுக்கு நாள் மிக கோரமாக தன்னை மாற்றிக் கொண்டே இருக்கிறது என்பதற்கான அடையாளம், சாதியை அழிப்பது என்பது வாய்சவடாலால் முடியாது, சமுக மாற்றம் ஒன்றே தீர்வு,
LikeLike