ஆர் கே நகர் தொகுதி மக்களின் குறை தொடர்பான மனுக்களை பெற தனி அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். மேலும், தண்டையார்ப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், முதல்வரின் தனிப்பிரிவின் தனி அலுவலர், வாரந்தோறும் செவ்வாய் அன்று மனுக்களை பெற்றுக்கொள்வார் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.