எது பழமையான ஜனநாயக நாடு? மோடியின் அமெரிக்க நாடாளுமன்ற உரையில் சொல்லப்படும் வரலாறு சரியா?

கடந்த 2015-ஆம் ஆண்டு இந்தியா வந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, நாடாளுமன்றக் குறிப்பேட்டில் பழமையான அமெரிக்க ஜனநாயகம், மிகப் பெரிய இந்திய ஜனநாயகத்தை வாழ்த்துகிறது என பொருள் வரும்படி ‘longest democracy wishes largest democracy’ என எழுதினார். 

இதற்கு, ஒபாமாவுடான சந்திப்பின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீதாராம் யெச்சூரி ‘இந்தியாவின் ஜனநாயம், அமெரிக்க ஜனநாயகத்தைவிட மூத்தது’ என விளக்கினார்.

இந்நிலையில், அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா ஜனநாயகத்தின் தாய் என வர்ணித்தார். வரலாற்றைத் தெரிந்துகொள்ளாமால் வெற்று புகழுரைக்கிறார் மோடி என சமூக வலைத்தளங்களில் விமர்சனம் வரத் தொடங்கியிருக்கிறது.

வழக்கறிஞர் பிரதாபன் ஜெயராமன் முகநூல் பதிவிலிருந்து…

இந்தியாவில் நாங்கள் சுதந்திரம் பெற்ற உடனே நிறம், பால், சாதி, மதம்,இனம் வேறுபாடின்றி வாக்குரிமையை எங்கள் அரசியல் சாசனம் வழங்கியது. ஆனால் அது அமெரிக்காவில் சுதந்திரத்துக்கு பின்னர் 100 ஆண்டுகள் கழித்து, அதுவும் இந்திய நாடு ஜனநாயக நாடு என பிரகடனப்படுத்தியதற்கு பின்னரே அவ்வுரிமைகள் அங்கு வழங்கப்பட்டது. எனவே, நாங்கள் தான் பழமையான, மிகப்பெரிய ஜனநாயக நாட்டினர்.

– தோழர்.சீத்தாராம் யெச்சூரி, அமெரிக்க அதிபர் ஒபாமா, நமது பாராளுமன்ற குறிப்பேட்டில் ” longest democracy wishes largest democracy’ என எழுதியதற்கு, அவருடனான விருந்தில் சுட்டிகாட்டியது.

“அமெரிக்கா ஜனநாயகத்தின் தாய்” – பிரதமர் மோடியின் அமெரிக்க நாடாளுமன்ற உரை.

இதில் எது சரி?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.