“தணிக்கை குழுவில் அமர்ந்துகொண்டு வட கொரியாவில் இருப்பதுபோல் சர்வாதிகாரம் செய்கிறார் நிஹ்லானி”: அனுராக் காஷ்யப்

ஷாகித் கபூர், அலியா பட் நடித்திருக்கும் Udta Punjab என்ற இந்திப் படத்தை தயாரித்திருக்கிறார் இயக்குநர் அனுராக் காஷ்யப். இந்த படத் தலைப்பில் இருக்கும் பஞ்சாப் என்ற வார்த்தை உள்பட, படத்தில் இடம்பெறும் பஞ்சாப் தொடர்பான அனைத்து அடையாளங்களும் வெட்டப்பட வேண்டும் என மத்திய தணிக்கைக் குழு தெரிவித்தது.
இதனால் கோபமடைந்த அனுராக் காஷ்யப் மத்திய அரசையும், மத்திய தணிக்கைக் குழு தலைவர் பஹ்லஜ் நிஹ்லானியை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் விளாசி தள்ளிவிட்டார்.
“இந்தப் படம்  அகாலிகளுக்கோ, பாஜகவுக்கோ எதிரான படம் அல்ல; இது போதை பொருட்களுக்கு எதிரான படம். இந்தப் படம் போதையால் வாழ்க்கையை இழக்கும் இளைஞர்களைப் பற்றிய படம்” என்று விளக்கம் கொடுத்திருக்கும் அனுராக்,
“பஞ்சாப் தொடர்பான அடையாளங்களை அழிப்பது முடியாத செயல்” என்று தெரிவித்துள்ளார்.
“வடகொரியா போல தணிக்கை குழுவில் அமர்ந்துகொண்டு சர்வாதிகாரம் செய்கிறார் நிஹ்லானி. மற்ற உறுப்பினர்களுக்கு அங்கு வேலையே இல்லை. எல்லாவற்றும் அவருடைய ஈகோதான் காரணன். சினிமா இயக்குநர்களுக்கு எப்படி சினிமா இயக்குவது என்று பாடம் எடுக்க விரும்புகிறார். இது சகிக்க முடியாதது.
இப்படியான ஒருவரை ஏன் இன்னும் தணிக்கைக் குழு தலைவராக நீடிக்கிறார் என தெரியவில்லை. ஜெட்லி, ரத்தோர் போன்ற அமைச்சர்கள் ஏன் இவரை நீக்க மறுக்கிறார்கள்? நாம் ஏதோ கஃப்காவின் நாவலில் இருப்பதுபோல தோன்றுகிறது. முடிவிலி உலகத்தில் வசிப்பது போலவும் வெளியேறும் வழி தெரியாமல் இருப்பது போலவும் இருக்கிறது” என்று வேதனையை வெளிப்படுத்தியிருக்கிறார் அனுராக் காஷ்யப்.
இந்நிலையில், மோடி பக்தர்கள் தூற்ற ஆரம்பிக்க, அதற்கு கடுமையான எதிர்வினையை பதிவு செய்திருக்கிறார்.
https://twitter.com/anuragkashyap72/status/740245763503067136
கட்சியிடம் காசு வாங்கி எழுதுபவர்கள் என்னை ஆம் ஆத்மி அல்லது காங்கிரஸுக்கு ஆதர்வாளனாக காட்ட முயற்சிக்கிறார்கள் என்று தெரிவித்திருக்கும் அவர், ஆம் ஆத்மி, காங்கிரஸைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டாம்; என்னுடைய பிரச்சினையை நானே பார்த்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.