ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தின் அடையாள ஆடையான காக்கி கால்சட்டை, வெள்ளை சட்டையை ராஜஸ்தான் மாநிலம் சூரத்தில் உள்ள சுவாமிநாராயணன் கோயிலில் உள்ள கிருஷ்ணர் சிலைக்கு அணிவித்துள்ளனர் அந்தக் கோயில் நிர்வாகிகள். கையில் தேசியக் கொடியும் பறக்கிறது.
இது சமூக ஊடகங்களில் சர்ச்சையைக் கிளப்ப கோயில் நிர்வாகி, “பக்தர்கள் தரும் உடைகளை சிலைக்கு அணிவிப்பது வழக்கம். இந்த முறை ஒரு பக்தர் காக்கி கால்சட்டையை பரிசளித்தார். அதை அணிவித்திருக்கிறோம். இப்படி சர்ச்சையாகு என்றெல்லாம் எங்களுக்குத் தெரியாது” என்று தெரிவித்திருக்கிறார்.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.