ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனத்தின் கொடைக்கானல் பாதரச கழிவுகள் மக்களையும் சுற்றுச்சூழலையும் நாசாமாக்கி வருவதையும் அதற்காக எவ்வித நஷ்ட ஈட்டையும் அந்த நிறுவனம் வழங்கவில்லை என்றும் தனது ராப் பாடலின் மூலம் உலகின் கவனத்தை கவர்ந்தார் சோஃபியா அஷ்ரஃப். பல ஆண்டுகளாக போராடிவரும் தன்னார்வல அமைப்புகளுடன் சேர்ந்து அவர் இதைச் செய்திருந்தார். சமூக வலைத்தளங்களில் தீவிர பிரச்சாரத்துக்குப் பின் ஹிந்துஸ்தான் லீவர் நஷ்ட ஈட்டை வழங்க ஒப்புக்கொண்டது.
இந்நிலையில் தன்னுடைய அடுத்த பிரச்சாரமாக போபால் விஷவாயு கசிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுத்தரும் முனைப்புடன் ராப் பாடல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் சோஃபியா.