நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் விஜய் சேதுபதியை சாதி, இனத்தை பரிசோதனை செய்துகொண்டிருக்க அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது முகநூல் பதில் சீமான்,
“முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு 25 வருடமாக விடுதலைக்காகக் காத்துநிற்கும் என் தம்பிகள் மற்றும் அக்கா நளினி ஆகியோரின் விடுதலைக்காகக் குரல் கொடுத்த என் ஆருயிர் தம்பி விஜய் சேதுபதிக்கு என் அன்பும் பாராட்டுகளும்..தொடர்ந்து போராடி எழுவரை மீட்போம்..
அன்பின் நெகிழ்ச்சியோடு,
சீமான்…” என பதிவு செய்துள்ளார்.