இதில் என்ன புதுமை?! ஏவாள் காலம் தொட்டு இது தானே நடக்கின்றது? சரி, இந்தப் படைப்பு சொல்ல வரும் கருத்து தான் என்ன?
பெண்கள், அவர்களின் வாழ்க்கையை, தீர்மானங்களை, அதற்கான போராட்டத்தைக் கையிலெடுக்க வேண்டும்… நன்று! ஆனால் அந்த களத்திற்கான நீளம், அகலம், ஆழம், எல்லாம் ஆண்களே வரையறுத்தால் எப்படி?
“எங்கள் குலதெய்வம், மகாலட்சுமி, மரியாள்” என்று புனித பிம்பம் கொடுத்து இத்தனை நூற்றாண்டுகளாய் உங்கள் ஆணாதிக்கத் திமிருக்கு இரை ஆக்கியது போதும்! உங்கள் வசதிக்காக கொண்டாடப்படும் சிலையாகவும், உங்கள் தேவைக்காக சந்தையில் விலையாகவும் பந்தாட நாங்கள் ‘இறைவிகள்’ இல்லை!
எங்களுக்கான களத்தை நாங்களே தீர்மானிக்கின்றோம்! நண்பர்களாய் கைக்கோருங்கள், ‘இறைவன்’களாய் போதிக்காதீர்கள்!
வினிதாவின் முகநூல் விமர்சனப் பதிவு.