சென்னை புத்தகக் கணகாட்சியில் பெரும்பாலான புத்தக விற்பனையாளர்கள், பதிப்பாளர்களின முகங்கள் இருண்டு போய் உள்ளன. நேற்று பல கடைக்காரர்கள சந்தித்துப் பேசினேன். கடந்த ஏழெட்டு வருடங்களில் இவ்வளவு மந்தமான விற்பனை உள்ள கண்காட்சி இதுதான் என பலரும் கூறினர். ஏற்கனெவே நசிவின் விளிம்பில் இருக்கும் பதிப்புத் தொழிலின் சிறிய பிடிமான்மாக இருந்துவருவது சென்னை புத்தக் கண்காட்சியே. அதுவும் இத்தகைய நிலை என்றால் இந்தத் தொழிலின் எதிர்காலம் மிகுந்த அச்சத்திற்குரியது.
ஊட்கங்கள் தரும் கவனமே இந்தக் கண்காட்சிக்கு சிறிய வெளிச்சமாக இருக்கிறது. இது இன்னும் தீவிரப்படுத்தப்பட்டால் கண்காட்சிக்கு வரவேண்டும் என்கிற உந்துதல் ஓரளவேனும் மக்களுக்கு ஏற்படும். நியூஸ் 7 தொலைக்காட்சி செய்வது போன்ற நேரலை நிகழ்ச்சிகளை இன்னும் சில தொலைகாட்சிகள் கண்காட்சியிலிருந்து செய்ய முன்வரவேண்டும். பபாஸியும் பல்வேறு ஊடக நண்பர்களும் இதற்கான முயற்சியில் ஈடுபடவேண்டும்.
சன் நியூஸ் தொலைகாட்சி சென்ற புத்தக்கண்காட்சியின்போது நடத்திய நேரலை நிகழ்ச்சிகள் பெரும் கவனம் பெற்றன. அதில் நானும் ஒரு பங்களிப்பைச் செய்தேன். அந்த 14 நாட்களில் 100 புதிய புத்தகங்களையாவது அறிமுகப்படுத்தியிருப்பேன். கடை கடையாகப்போய் நூல்களை வாங்கி அறிமுகபபடுத்தினேன். .நேரலையிலேயே நூல் வெளியீட்டு விழாக்கள் செய்யலாம் என்ற என் யோசனையை சன் நியூஸ் ஏற்றுக்கொண்டது. தினமும் ஒரு பதிப்பகத்தின் நூல்கள் வெளியிடப்பட்டு கருத்துரைகள் வழங்கப்பட்டன. புத்தக வெளியீடு என்பதை 100 பேர்கொண்ட சிற்றரங்கிலிருந்து இலட்சக்கணக்கான பார்வையாளர்களிடம் கொண்டு சென்றோம். . அப்போது பல ஊடக நண்பர்கள் இதுபோன்ற ஒன்றை தாமும் நடத்தவிரும்புவதாகச் சொன்னார்கள். ஆனால் பிறகு அது எல்லோருக்கும் மறந்துவிட்டது. இதையெல்லாம் இப்போது நான் மட்டும்தான் நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
ஒரு புத்தகக் கண்காட்சியில் புதுமையாக ஆக்கபூர்வமாக செய்வதற்கு எத்தனையோ விஷ்யங்கள் இருக்கின்றன. ஆனால் செய்வது யார்? நான் கடந்த பல புத்தகக் கண்காட்சிகளில் நானாக் முன்வந்து பல விஷ்யங்களை கண்காட்சிக்குள்ளும் ஊடகங்களிலும் செய்திருக்கிறேன். ஆனால் இந்த முறை அந்த அனுபவங்களின் விளைவாக ஏற்பட்ட கசப்பினால் யாரிடமும் போய் மன்றாட எனக்கு மனநிலையில்லை. இப்போது எத்தனை எத்தனையோ எண்ணங்கள் மனதில் அலைமோதுகின்றன. இதைச் செய்யலாமே, அதைச் செய்யலாமே என்று அவ்வளவு நினைக்கிறேன். ஆனால் கனவுகள் காண்பவனை அதற்காக முழுமையான உழைப்பை தருகிறவனை எப்படி சோர்ந்து வெளியேறச் செய்வது என்பதில் கில்லாடிகள் நிறைந்த இடம் இது.
கண்காட்சியில் என்னிடம் ஏதாவது ஊடகத்திலிருந்து ‘கண்காட்சியைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’ என்ற தட்டையான கேள்வி திரும்பத்திரும்ப கேட்கப்படும்போது அவ்வள்வு சோர்வாக இருக்கிறது ஊடகங்கள் இதைத்தாண்டி எவ்வளவோ செய்ய முடியும்.
மனுஷ்யபுத்திரன், கவிஞர், புத்தக வெளியீட்டாளர்.
முகப்புப் படம்: Prabhu Kalidas