இந்திய பார் கவுன்சில் கட்டத்தில் உள்ள லிஃப்டை யார் பயன்படுத்த வேண்டும், யார் பயன்படுத்தக் கூடாது என்பது குறித்து பார் கவுன்சில் தலைவர் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில், பணியாளருக்கும் கீழே உள்ள துணை செயலாளர்கள் போன்றோர், 50 வயதுக்கும் கீழே உள்ளவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர மற்றவர்கள் லிஃப்டைப் பயன்படுத்தினால் அவர்களுடைய அந்த நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.
அதுபோல, துப்புரவாளர்கள், வெளி ஏஜென்ஸிகள் மூலம் பணியாற்ற வருபவர்கள் 50 வயதுக்கும் கீழே உள்ளவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர, லிஃப்டைப் பயன்படுத்துவதாகத் தெரிந்தால் அவர்களுடைய சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.
வெளியிலிருந்து வரும் ஆட்களும் (கற்றறிந்த வழக்கறிஞர்கள், மதிப்பிற்குரிய நீதிபதிகள் தவிர்த்து, 50 வயதுக்கும் கீழே உள்ளவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் தவிர்த்து) லிஃப்டைப் பயன்படுத்தக்கூடாது. அப்படி பயன்படுத்தினால் அவர்களிடம் ரூ. 50 அபராதம் வசூலிக்கப்படும்.
பார் கவுன்சிலின் மேற்கண்ட சுற்றறிக்கை சமூக வலைத்தளங்களில் விவாத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இப்ப புரியுதா ஏழைகளுக்கு என்றுமே நீதி கிடைக்காதென்பது.
LikeLike