இறைவி திரைப்படம் குறித்து பாராட்டியும் சிலாகித்தும் விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில் எழுத்தாளர் சாரு நிவேதிதா, தனது வலைப்பூவில் கடுமையான வார்த்தைகளால் இறைவியை பற்றி எழுதியிருக்கிறார்.
“கையைக் காலைக் கட்டி மலக்கிடங்கில் போட்டது போல் இருந்தது. இவ்வளவு ஆபாசமான, அருவருப்பான குப்பைப் படத்தை என் வாழ்நாளில் பார்த்ததில்லை. பத்தே நிமிடத்தில் கிளம்பியிருப்பேன். ஆனால் இருட்டில் தடுக்கி விழுந்து விடலாம் எனப் பயந்ததால் இடைவேளை வரை அந்த மலக்கிடங்கில் கிடந்து விட்டு வந்தேன். மை காட், எப்பேர்ப்பட்ட கொடூரம்! விரிவான விமர்சனம் நாளை எழுதுகிறேன்”.