எஸ்.சி / எஸ்.டி. துணைத்திட்டத்திற்கு தனிச்சட்டம் வேண்டும்: எழுத்தாளர் அன்புசெல்வம் கிரண்பேடியிடம் கோரிக்கை

 

ஜூன் 1 புதுச்சேரியில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கின்ற துணைநிலை ஆளுநர் கிரன்பேடியை தலித் செயல்பாட்டுக்கான சிந்தனையாளர் வட்டம் சார்பில் எழுத்தாளர் அன்புசெல்வம் சந்தித்தார்.  எஸ்.சி / எஸ்.டி. துணைத்திட்டத்திற்கு புதுவை அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி  ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நடந்தது.

அரசு வகுக்கின்ற பொதுத்திட்டங்களில் தலித் மற்றும் பழங்குடி மக்களின் வளர்ச்சிப் பயன்பாடுகள் விடுபட்டுப் போவதால் அதில் கூடுதல் கவனத்தை செலுத்த எஸ்.சி / எஸ்.டி. துணைத்திட்டத்தை மத்திய அரசு உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. இந்திய அளவில் 16 % சதவிகிதமாகவும், மாநில அளவில் 19 % ஆகவும் துணைத்திட்ட நிதி ஒதுக்கீடு செய்து பயன்படுத்த வேண்டும் என இத்திட்டம் கூறுகிறது. இத்திட்டம் உருவாக்கப்பட்டு 35 ஆண்டுகள் கடந்த பின்னும் பின் தங்கிய தலித் மக்களின் பொருளாதார வளர்ச்சியில் தன்னிறைவை ஏற்படுத்தாமல் பல குறைபாடுகளோடு நீடிப்பதுடன், ஒதுக்கப்படும் நிதி சரி வர பயனாளிகளைச் சென்றடைவதில்லை என இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை ஆண்டு தோறும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டி வருகிறது.

பயிர்க்கடன், வீட்டுமனை வழங்குதல், ஊரக வளர்ச்சித் திட்டத்தில் வழங்கப்படும் தொகுப்பு வீடுகளுக்கு கான்க்ரீட் தளம் அமைத்தல், பள்ளிகள்விடுதிகளை தரம் உயர்த்தல் ஆகிய திட்டங்களையும் கடந்து ஒரு மாநிலத்தின் பொதுத்திட்டத்தில் எஸ்.சி மக்கள் வளர்ச்சியில் விடுபட்டுப்போன இடைவெளியை நிரப்புவது மட்டுமல்லாமல்,  பொருளாதார வளர்ச்சியில் ஏற்படுகின்ற பின்னடைவை சரி செய்து, தேவையற்ற துறை ரீதியான நிதி விரயத்தையும் தவிர்க்க வேண்டியுள்ளது. நெடுஞ்சாலை, மின்சாரம், குடிநீர், விலையில்லா இலவசத் திட்டங்கள் போன்றவற்றுக்கு செலவழிப்பது அல்லது காலம் தாழ்த்துவது, அல்லது மத்திய அரசுக்கே திருப்பி அனுப்புவதும் இதில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு, புதுச்சேரியை விட முன்னோடியாக ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்கள் 2013 – ல் இதற்கென ஒரு தனிச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. “எஸ்.சி / எஸ்.டி. துணைத்திட்ட நிதி ஆதாரங்களைத் திட்டமிடுதல், ஒதுக்கீடு செய்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் சட்டம் – 2013″ என இச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகின்றன.  மிகவும் அற்புதமான நடைமுறைகளை பிற மாநிலங்களும் பின்பற்றிச் செயல்படும் அளவுக்கு சட்ட வரையறை அமைந்துள்ளது. பட்டியல் இன மக்கள் எதிர் நோக்கியுள்ள திட்டங்கள் அனைத்தும் அடுத்த 10 ஆண்டுகளில் முழுமையாக்கப்படும் என இச்சட்ட முன்வரைவில் பெருமிதத்தோடு முன்மொழியப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் கர்நாடகாவைப் போல தற்போது சத்திஷ்கர் மாநிலத்திலும் இச்சட்டத்தின் தேவை பேச்சளவில் வந்துவிட்டது. எல்லா மாநிலங்களிலும் இதன் தேவை இன்று விவாதிக்கப்பட்டு வருகின்றது.

இந்த சூழலைக் கருத்தில் கொண்டு புதுச்சேரி பிரதேசத்தில் வாழும் தலித் மக்களின் நலன் கருதி மத்திய அரசு ஒதுக்குகின்ற எஸ்.சி / எஸ்.டி. துணைத்திட்டத்திற்கென்று தனிச்சட்டத்தை உருவாக்க, புதிதாகப் பொறுப்பேற்க இருக்கிற புதுச்சேரி அரசை வலியுறுத்தும்படிதலித் செயல்பாட்டுக்கான சிந்தனையாளர் வட்டம்சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.