மதம், அபினை போல போதையானது என மார்க்ஸ் சொன்னது, சாதிக்கும் பொருத்தமாகப் பொருந்திப் போகிறது. சாதி என்னும் போதையில் ஆழ்ந்து கிடக்கும் சிலர், தாங்கள் உளறுவதெல்லாம் வரலாறு என்று பரப்பி வருகிறார்கள். ஆண்ட சாதி பெருமிதங்களுக்கு நடுவே சாதி போதையில் ஆழ்ந்த ஒருவர், தமிழ்நாட்டை கவுண்டர் நாடு ஆக்க வேண்டும் என்கிறார்.
அவருடைய பதிவைக் கீழே தந்திருக்கிறோம். Dheeran Saravanan Gurusamy Gounder என்ற பெயரில் முகநூல் உள்ள பதிவு இது:
“உலகை ஆண்ட ஒர் இனம் இன்று நாடாள முடியாம கிடக்கிறது. போதிதர்மனை உலகிற்கு தந்த இனம் அதன் சுவடுகளை மட்டும் இன்று காணமுடிகிறது. உலகிலேயே மிகப்பெரிய அங்கோர்வாட் கோவிலை தந்த இனம் இன்று தெருக்கோடியில் நிற்கிறது.
அலெக்சாண்டரை வீழ்த்திய புருசோத்தமன் ஒரு கவுண்டர்.
அசோகரை எதிர்த்து போர் புரிந்த அரசன் ஒரு கவுண்டர்.
தஞ்சை பெரிய கோவிலை கட்டியவர் அருண்மொழி வர்மன் இவரும் கவுண்டர் இனமே.
உலகில் நாள்காட்டியை உருவாக்கிய மாயோன் மக்கள் இவர்களும் கவுண்டர்கள்.
பெங்களூரை உருவாக்கியவர் கெம்பு கவுண்டர்.
உலக கடற்பரப்பை பல நூறு ஆண்டுகள் தன் ஆதிக்கத்தில் வைத்திருந்த ஒரே இனம் கவுண்டர் இனம் மட்டுமே.
மேற்கத்திய மக்கள் ஆதமே நிர்வாணமாக திரியும் போது உடையை அணிய கற்றுக்கொடுத்து உடையையும் வழங்கியவன் கவுண்டனே.
சக்கரயுகம் தேவை என்பதால் சக்கரத்தை கண்டுபிடித்து உலகிற்கு வழங்கியவனும் கவுண்டனே.
குமரிக்கண்டம் அழியும் என்று சரியாக காலத்தை கணித்து ஒரு உயிர்கள் கூட சாகமல் அனைத்தையும் பாதுகாப்பாக வெளியேற்றி, அரியவகை தாவரங்களை பாதுகாத்த இனம் கவுண்டர் குமரிக்கண்டம், மாயோன் கண்டம், பல்லவ கண்டம், பாண்டிய கண்டம், சோழ கண்டம், சேர கண்டம் முதல் சிந்துச்சமவெளி வரை பரவி வாழ்ந்த ஒரே குடி மூத்த குடி உலகின் முதல் குடி ஆதி குடி ஆண்ட குடி நாகர், இயக்கர், வேடர் என்ற கவுண்டர் குடியே.
வரலாறு தெரியாத இனத்தால் வரலாற்றை படைக்க முடியாது. வரலாராய் வாழ்ந்த இனம் இன்று தனது வரலாற்றை இழந்து நிற்கிறது இது காலத்தின் கொடுமை. குமரியில், சிந்துவில் இருந்து சென்ற ஒரே இனம் பல காலநிலையின் காரணமாக அந்தந்த இயற்கையின் இடத்திற்கு ஏற்றவாறு ஒரு மொழியின் ஒலிப்புத்தன்மை பல மொழிகளாக உருவெடுத்துள்ளது
ஆறுபடை வீடுகளில் மட்டும் அல்ல கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளில் கூட கவுண்டருக்கு மண்டபப்படி உள்ளது இப்படி தமிழ்நாட்டில் வேறு எந்த சாதிக்கும் கிடையாது.
கள்ளழகருக்கு இன்று கூட சீதனப்பொருட்கள் கவுண்டர் வீட்டில் இருந்தே செல்கிறது.
கொடைவள்ளல் என்று பெயர் எடுத்த பாரி, ஓரியும் கவுண்டரின் முன்னோரே. கொள்ளைக்கார இஸ்லாமியனையும்,கொலைகாரன் கிருத்துவனையும் கதிகலங்க வைத்த இனம் கவுண்டர் இனமே. இறைவன் ஒருவரே அவர் சிவன் மட்டுமே சிவனுக்கே கண் கொடுத்த கண்ணப்பனார் கவுண்டரே. இந்திய விடுதலைப்போருக்கு வெள்ளக்கார கிருத்துவனுக்கு எதிராக துப்பாக்கி ஏந்தி முதன்முதலில் போராடிய இனம் கவுண்டர் இனமே. இப்படி மிக நீண்ட வரலாறு கொண்ட ஒரே இனம் கவுண்டர் இனம் மட்டுமே அதனால் தமிழ்நாட்டுக்கு கவுண்டர் நாடு என்று பெயர் வைத்தாலும் தவறில்லை.
ஒற்றுமை நிறைந்த சமூகமே!!!
உயர்வான சமூகம்!!!!!
மாவீரன் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை
NEE KAVUNDAN NAADUNU VAI..NAAMUTHALIYAAR NAADUNU VAKKIUREN,NAMMA RENDU PERUKKUM SOZHI POTTU PAAPOMA YAAR JEYIKIRAANGANNU..PONGADAA KONGA PAYALUVOLAA
LikeLike
நானும் கவுண்டர் ஜாதில பொறந்தவன் தான் ஆனால் நீங்க சொன்னதுல பாதி தான் உண்மை ……….இல்லாத வரலாற சொல்லி நம்ம தராதரத்தை குறைக்க வேணாம்
LikeLike