இறைவி சர்ச்சை: “என்னைத் தெரியல இந்தக் கருமத்தைக்கு”: நிகழ்ச்சி தொகுப்பாளினியை  மேடையில் சாடிய ராதாரவி

இறைவி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் நிஷா, ராதாரவியின் பெயரைச் சொல்லாமல் விட்டுவிட்டதால் ஆத்திரமடைந்த ராதாரவி, அவரை மேடையிலே அநாகரிகமான முறையில், “ராதாரவியைப் பத்தித் தெரியல, இந்தக் கருமத்தை கூட்டியாந்து நிகழ்ச்சி நடத்துறீங்க” என பேசினார்.

நிகழ்ச்சி நடத்துபவர்கள் கொடுத்த ஸ்கிரிப்டையே தான் படித்ததாக தொகுப்பாளர் நிஷா, தெரிவித்த நிலையில், பெண்களின் பெருமை பேசுவதாக சொல்லிக் கொள்ளும் பட  நிகழ்ச்சியில் பெண்ணை பொது இடத்தில் அவமதிப்பதா என சர்ச்சை எழுந்துள்ளது.

Saraa Subramaniam

‪#‎இறைவி‬ படைத்த உன்னதர்கள் கவனத்துக்கு…

“படைப்பாளிகளையும் அவர்களது படைப்புகளையும் வெவ்வேறாகத்தான் பிரித்துப் பார்க்க வேண்டும் என்பது எழுத்தாளர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா? சினிமா படைப்பாளிகள் – கலைஞர்களுக்கு பொருந்தாதா?” என்று அப்பாவியாகக் கேட்டதற்கு அண்ணன் ‪#‎அனானியன்‬ உதாரணத்துடன் கூறியது:

“மனிதிகளின் மேன்மை போற்றும் இறைவி எனும் திரைக்காவியத்தின் நிகழ்ச்சி அது. அந்த நிகழ்ச்சியை ஓர் இளம் தொகுப்பாளினி தொகுத்து வழங்குகிறார். படக்குழு ஏற்கெனவே கொடுத்த ஸ்கிரிப்டைத்தான் அவர் பயன்படுத்துகிறார். அந்த நிகழ்ச்சியில் ராதாரவி எனும் நடிகர் பேச மேடைக்கு வருகிறார். தனது பெயரை அந்தத் தொகுப்பாளினி கடைசி வரை குறிப்பிடவில்லை என்று ஆதங்கப்பட்டு, அந்தத் தொகுப்பாளினியை அசிங்கமாவும் அருவருப்பாகவும் பேசித் தள்ளுகிறார். அந்தப் பேச்சை ‘இறைவி’ படக்குழு விழுந்து விழுந்து சிரித்து ரசிக்கிறது. அந்த யூடியூப் வீடியோவில் சமந்தப்பட்ட பெண் கருத்து இது:

“MC Nisha: Read all ur comments. I was the anchor of this show. As an MC my job was to follow the script given to me by the film team which dint hav his name added. The movie is being titled as a “Female Godess” and here is a man u see ridiculing a women publicly. it’s sad tat the film team dint standup and take the blame rather stood there happily covering everything over me.”

மனிதிகளின் மகத்துவம் போற்றும் ‘இறைவி’ படக்குழுவுக்கு நிஷா என்பவரும் மனிதி என்பது தெரியாமல் போய்விட்டதோ?

எனவே, படைப்பு வேறு… படைப்பாளிகள் வேறு என்பது நம் தமிழ் சினிமாவுக்கும் பொருந்தும். நிஷா விஷயத்தில் எதிர்வினையாக, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அந்த ஒற்றை எழுத்தை உதிர்க்கும் வீடியோவை ஒரு முறைப் பார்த்து ஆறுதல் அடைந்தேன்” என்று முடித்தார் அண்ணன் அனானியன்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.