அது மாட்டிறைச்சி; ஆனால் காலாச்சார காவலர்களான தாத்ரி கொலைக்காரர்கள் குறித்து…

Lalita Panicker, Hindustan Times

‘இது ஒரு எதிர்பாராத சம்பவம்; வகுப்புவாதம் தொடர்பானதல்ல’ மத்திய கலாச்சார அமைச்சர் மகேஸ் சர்மா சொன்னார். கடந்த டிசம்பர் 2015ல் ஒரு கும்பலால் உத்திரபிரதேசம், தாத்ரியில் அடித்துக் கொள்ளப்பட்ட முகமது அக்லக்கின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லப் போன இடத்தில் உதிர்த்த வார்த்தைகள் இவை. அக்லக்கின் வீட்டு குளிர்பதனப் பெட்டியில் வைத்திருந்த இறைச்சியை, நமது கலாச்சாரக் காவலர்கள் மாட்டிறைச்சி என கண்டுபிடித்து,  அக்லக்கின் வீட்டில் இருந்த தையல் எந்திரத்தாலே அவருடைய தலையில் தாக்கியதால் தனது உயிரை இழந்தார். சில நாட்களில் வெளியான சோதனை முடிவுகளில் குளிர்பதனப் பெட்டியில் இருந்தது ஆட்டுறைச்சி என்று வந்தது, ஆனால் இப்போது இறுதி வார்த்தையாக அது மாட்டிறைச்சிதான் என்று வந்திருக்கிறது.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் அக்லக் ஏன் கொன்றனர், அவருடைய மகன் ஏன் மிக குரூரமாக தாக்கப்பட்டார் என்பதற்குப் பதிலாக,  குளிர்பதனப் பெட்டியில் இருந்தது மாட்டிறைச்சியா இல்லையா என்பது குறித்தே அனைவரும் விவாதித்தனர். ஏழை மனிதனால் மாட்டிறைச்சி இல்லையென்றாலும் மற்ற இறைச்சியை சேமிக்க முடியுமா என இடைவிடாமல் தொலைக்காட்சி சேனல்கள் கேட்டன. நல்ல வேளையாக, தன்னுடைய வீட்டில் தனக்கு பிடித்த இறைச்சியை சேமித்து வைக்கும் உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது. ஆனால், இந்தியாவிலிருந்து மாட்டிறைச்சி  வெளியேற்ற விரும்பும் வலதுசாரி கும்பலில் இந்தச் செயல் முகத்தில் அறைந்து வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்தியா முழுமைக்கும் இந்தச் சம்பவம் சினத்தை ஏற்படுத்தியது, இந்தியாவைத் தாண்டி வெறுப்புணர்வை ஏற்படுத்தியது. உலகம் முழுமைக்கும் தலைப்புச் செய்தி ஆனது.

அது மாடிறைச்சி என தெரியவந்தபோது, காரணமே இல்லாமல் கொல்லப்பட்டார் அந்த மனிதர் என சொல்லிக் கொண்டோம். இப்போது அது மாட்டிறைச்சிதான் என வெளிப்படையாக தெரியவந்துள்ளது. அதாவது இந்த கொடிய குற்றத்தை நியாயப் படுத்துவதற்காக புத்திசாலித்தனமான நகர்த்தலாக இதைச் சொல்லலாம். ஆனால், உண்மையான கேள்வி என்பது நாம் ஏன் இறைச்சிக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்பதே. உங்கள் குளிர்பதன பெட்டியில் இதைத்தான் சேமித்து வைக்க வேண்டும் என்று கட்டளையிட இங்கே யாருக்கு அதிகாரம் இருக்கிறது?

அது அழிவின் விளிம்பில் இருக்கும் பாதுகாக்கப்பட வேண்டிய விலங்கின் இறைச்சி எனில், நாம் அதுகுறித்து பேசலாம்; அதுவும் வனவிலங்கு அதிகாரிகளுக்குத்தான் அது குறித்து விசாரிக்கும் உரிமை இருக்கிறது. இந்த விஷயத்தை மத மற்றும் பசு பாதுகாப்பு என்ற போர்வையில் உள்ள சிலரிடம் சிக்கியுள்ளது; இவர்கள் சட்டத்தை தன் கையில் எடுத்துக் கொண்டு திரிகிறார்கள். இவர்கள் வீடுகளில் புகுந்து குளிர்பதனப் பெட்டியை சோதனையிடுவதன் மூலம், நாம் எதை உண்ண வேண்டும் என்றும் நமது வாழ்க்கை முறை எப்படி இருக்க வேண்டும் என்று நமக்கு கட்டளையிடுகிறார்கள் என்கிற நிதர்சனத்தை உணர்த்துகிறார்கள்.

தன்னை கலாச்சார காவலராகக் கருதி தேசத்திற்கு சேவையாற்றும் மகேஷ் சர்மா போன்ற பொறுப்பற்றவர்களுக்கு இது குறித்து பேச எந்த அவசியமுமில்லை. இது போன்ற தீய செயல்பாடுகளுக்கும் நமது கலாச்சாரத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை; பசுவைப் பாதுகாக்கிறேன் என்கிற பெயரில் ஏவப்பட்ட காட்டுமிராண்டித்தனது இது.  ஆனால்,  ‘நான் சொன்னேன் இல்லையா?’ போன்ற வார்த்தைகளை நாம் இப்போது எதிர்பார்க்கலாம். அதாவது அது மாட்டிறைச்சி, அக்லக் இப்போது பகையாளியாகிவிட்டவர். அது என்ன? பால் குடிப்பவர் மீது தாக்குதல் தொடங்குவோம்; அது புனிதப் பசு தரும் துணை பொருளாயிற்றே.

One thought on “அது மாட்டிறைச்சி; ஆனால் காலாச்சார காவலர்களான தாத்ரி கொலைக்காரர்கள் குறித்து…

  1. வணக்கம்
    உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை தளத்தில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. அவ்வப்போது செய்திகள் அனுப்புவேன். எனவே எனக்கு மின்னஞ்சல் முகவரியை அனுப்பி வைக்கவும்.

    எனது மின்னஞ்சல்
    Pn.pala@gmail.com

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.