“மாணவர்களை சேர்க்காவிட்டால் சம்பளம் கிடையாது” ஆசிரியர்களை மிரட்டி அமைச்சர் கே.சி.கருப்பண்ணனின் இன்ஜினியரிங் கல்லூரியில் சர்குலர்

தமிழக சுற்றுச் சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணனுக்குச் சொந்தமான ஸ்ரீ வெங்கடேஷ்வரா ஹை டெக் இன்ஜினியரிங் கல்லூரி, கோபிசெட்டிப்பாளையத்தில் உள்ளது. இந்தக் கல்லூரியில் முதல்வர், கல்லூரியில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறார். அதில், “ஒரு வருடத்தில் மூன்று மாணவர்களை கட்டாயம் கல்லூரியில் சேர்க்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ள நிலையில், இதுவரை ஒரு மாணவரைக்கூட யாரும் சேர்க்கவில்லை. எனவே, போதிய நடவடிக்கைகள் எடுத்து மாணவர்கள் சேர்க்கையில் கவனம் செலுத்த வேண்டும். அப்படியில்லையெனில் மே மாதத்துக்கான சம்பளம் வழங்கப்பட மாட்டாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. தனியார் பொறியியல் கல்லூரிகளில் போதிய சம்பளம் இல்லாமல், பணி பாதுகாப்பும் இல்லாமல் ஆசிரியர்கள், பணியாளர்கள் தவிக்கும் நிலையில் வருடாவருடம் மாணவர் சேர்க்கை என்ற சுமையும் விழுகிறது. தமிழத்தை ஆளும் அமைச்சராக இருக்கும் ஒருவரின் கல்லூரியில் இதுபோன்ற செயல்கள் வெளிப்படையாக நடப்பது சமூக ஊடகங்களில் கண்டனத்தை கிளப்பிவருகிறது.

3 thoughts on ““மாணவர்களை சேர்க்காவிட்டால் சம்பளம் கிடையாது” ஆசிரியர்களை மிரட்டி அமைச்சர் கே.சி.கருப்பண்ணனின் இன்ஜினியரிங் கல்லூரியில் சர்குலர்

  1. செல்வராஜ்க்கு சொந்தமான திருச்சியில் உள்ள சிவானி பொறியியல் கல்லூரியிலும் இதேபோன்ற நிலை தான் உள்ளது. அங்கு 5மாணவர்களை சேர்க்காவிட்டால் 20% ஊதியம் குறைக்கப்படும் என்று சுற்றறிகை அனுப்ப பட்டுள்ளது.

    Like

  2. Students shall beware of such money minded institutions and avoid seeking admission there, otherwise they’ll fall victims of their money making business rather than achieving academic excellence & professional expertise. This is one of the reasons for larger unemployment among engineers. Will AICTE & Anna University take appropriate action to eliminate such erring institutions and improve competence of future engineers to take responsibility of building the nation?

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.