பிரவீன் குமார் (20) கால்பந்தாட்ட வீரர். பிரவீனும் இவருடைய நண்பர் லெனினும் அடையாறில் உள்ள கல்லூரியில் பயிற்சி முடித்து பிராட்வே திரும்பிக் கொண்டிருந்தனர். அடையாறில் ஒரு கார் திடீரென பிரேக் அடித்ததில் காரின் பின்னால் சென்று கொண்டிருந்த இவர்களுடைய பைக் கட்டுப்படுத்த முடியாமல் கார் மீது மோதியது. இதில் காரில் இருந்த பெண்ணுக்கும் இளைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. பைக் சேதமடைந்ததால் அதை சரியாக்கித் தர வேண்டும் என பிரவீன் குமார் கேட்டிருக்கிறார், அந்தப் பெண்ணும் ஒப்புக்கொண்ட நிலையில், அந்த வழியாக வந்த நடிகர் சூர்யா, தனது காரில் இருந்து இறங்கி, என்ன நடந்தது?, நடக்கிறது என்பது குறித்து அறியாமல், பிரவீணை இருமுறை கன்னத்தில் அறைந்திருக்கிறார்.
பிரவீன் மீது எந்தத் தவறும் இல்லை என அருகில் இருந்தவர்கள் கூற, காரில் ஏறிச் சென்றிருக்கிறார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய அந்தப் பெண்ணும் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட, இந்த இரு இளைஞர்களை மட்டும் காவல் துறையினர் அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
தவறே செய்யாத தன்னை பொது இடத்தில் அடித்த நடிகர் சூர்யா மீது பிரவீன் கொடுத்த புகாரையும் வாங்க மறுத்துள்ளனர். பிறகு, வழக்கறிஞர்கள் வந்து வலியுறுத்திய பிறகு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருப்பானவர்களும் அழுக்கானவர்களும் குற்றவாளிகளா என பிரவீன் நடிகர் சூர்யாவிடம் கேட்கிறார்.
YARAAGA IRUNTHAALUM..SURIYAVAAGA IRUNTHAALUM AVASIYAM THANDIKKAPPADA VENDUM…
LikeLike
இழிவான செய்கை இது. அகரம் அறக்கட்டளை சார்பாக அறை விழுந்ததா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
LikeLike
//கார் திடீரென பிரேக் அடித்ததில் காரின் பின்னால் சென்று கொண்டிருந்த இவர்களுடைய பைக் கட்டுப்படுத்த முடியாமல் //
இதை மட்டும் வைத்துக்கொண்டு பார்த்தால்,அந்த விபத்தைப் பொறுத்தவரை இந்த இளைஞர்கள் மீதுதான் தவறு.
ஏனெனில், ´சட்டன் பிரேக்`சட்டவிரோதமானது அல்ல! பின்னால் போகிறவர்தான் சரியான இடைவெளியைப் பேணவேண்டும்.
சூரியா அடித்திருந்தால் தவறுதான். அதை ஆதாரத்துடன் நிரூபிக்கவேண்டியது அவரது கடமை.
LikeLike