கேரள முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள பினராயி விஜயனுக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜெயலலிதா, பினராயி விஜயனுக்கு வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அண்மையில் நடைபெற்ற கேரள சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரி ஜனநாயக முன்னணி மகத்தான வெற்றி பெற்று கேரள முதலமைச்சராக பினராயி விஜயன் பதவியேற்றுள்ளதற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பினராயி விஜயன் தலைமையில் கேரள மாநிலம் வளர்ச்சி மற்றும் வளம் நிறைந்ததாக மாறுவதற்கு தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாகவும் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.