சேம நல அரசு என்பதை மெல்ல மெல்ல அழித்து அந்நிய மூலதனத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு ஏற்றதாக அரசாங்கத்தினை மாற்றக் கூடிய ஏற்பாட்டினை செய்து வருகிறது மோடி அரசு. உலக நிதி மூலதனத்தை வேண்டுமென்றே தாஜா செய்யும் மத்திய அரசாங்கத்தின் இந்த நோக்கத்தின் பின்னணியில் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கமில்லை. மாறாக பாரதீய ஜனதா கட்சியின் மிக ஆபத்தான பிரித்தாளும் நிகழ்ச்சி நிரலுக்கு சர்வதேச அங்கீகாரம் பெறும் நோக்கமே உள்ளது என்கிறார் சிபிஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி.
கடந்த அரசாங்கத்திடம் இருந்து இந்த அரசாங்கம் எவ்வாறு வேறுபடுகிறது?
கடந்த இரண்டாண்டுகளில் ஆட்சி அமைப்பிலேயே தேசிய அளவில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இடது சாரி ஆதரவுடன் அமைந்த கடந்த ஐக்கிய முற் போக்குக் கூட்டணி அரசாங்கம் 1 ஆட்சியின் போது இந்த பிற்போக்கான நோக்கங் களுக்கு முட்டுக்கட்டை போடப்பட்டது. அரசியலமைப்புச் சட்டத்தில் ஒடுக்கப் பட்ட மக்களுக்கு அளித்திருந்த உரிமைகளை அங்கீகரிக்கும் வகையில் முதிர்ந்தஜனநாயகக் கொள்கைகளை வடிவமைப்பத்தில் ஐமுகூ 1 அரசு கவனம் செலுத்தியது. உதாரணமாக வேலைக்கான உத்தர வாதம் என்பது அடிப்படை உரிமையல்ல. ஆனால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தின் மூலமாக இந்த வேலைக்கான உத்தரவாதம் என்பதுவிரிவுபடுத்தப்பட்டது. அதே போன்று, தகவல் அறியும் உரிமை என்பது அடிப்படை உரிமையல்ல. ஆனால் இதுவும்தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக அனைவருக்கும் எளிதாக்கப் பட்டது. வனத்தில் உற்பத்தியாகும் பொருட்களுக்கான உரிமை என்பதுஆதிவாசி மக்களுக்கான அடிப்படை உரிமையல்ல. அதுவும் வன உரிமைச்சட்டத்தின் மூலம் பெறப்பட்டது. கல்விக் கான உரிமை போன்று உணவுக்கான உரிமையும் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது நாம் காண்பது இதற்கு எதிர்மறையான போக்காகும். இந்திய குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக குணாம்சத்தில் இருந்து ஆர். எஸ். எஸ். சின் பாசிச இந்து ராஷ்டிர நோக்கத்திற்கு உகந்ததாக மாற்றும் முயற்சியில் இந்த அரசாங்கத்தின் பாதை செல்கிறது. பாடத்திட்டத்தின் மீதான தாக்குதல், முற்போக்கான குணாம்சங்களுடன் கூடிய பல்கலைக்கழகங்களின் மீதான தாக்குதல், சிறுபான்மையினர் மீதான தாக்குதல், இந்தியாவின் உண்மை சரித்திரத்திற்கு பதிலாக இந்திய புராணக் கதைகளை திணிக்கும் முயற்சி, இந்திய தத்துவங்களுக்குப் பதிலாக இந்து இறையியலை புகுத்தும் முயற்சி, இது போன்ற அனைத்துமே தற்போதைய இந்த ஆட்சியின் ஒட்டுமொத்த குணாம்சத்தை பிரதிபலிப்பதாக உள்ளது. மேலும் இந்திய குடியரசினை அதன் மதச்சார்பற்ற இந்திய ஜனநாயகத்தை இந்து ராஷ்டிரமாக மாற்றும் முயற்சிக்கான உதாரணங்களாகும். சுருக்கமாகச் சொல்வதென்றால், ஐமுகூ 1 அரசாங்கம் ஜனநாயகத்தையும் அரசியலமைப்புச் சட்ட உரிமைகளையும் விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டது. ஆனால் தற்போதைய அரசாங்கம் அதனுடைய பிரிவினைவாத நிகழ்ச்சி நிரலை இந்தியா முழுவதும் அமலாக்கும் முயற்சியில் இருக்கின்றது.
மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் இடையூறுகள் விளைவிப்பவர்களாக இருக்கிறார்கள் என்று அவர்கள் சொல்கிறார்களே?
நாடாளுமன்றத்தின் ஆளுமையை அவர்களுடைய சதித்திட்டங்களின் மூலமாக குலைக்க முயல்கிறார்கள். அவர்கள்கொண்டு வந்த மூன்று அவசரச் சட்டங் களின் மூலமாக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் சாராம்சங்களை நீர்த்துப் போக முயற்சி செய்தனர். அவை மூன்றும்நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட போது, அவர்கள் மாநிலங்களுக்கு அவைஅந்தந்த மாநிலங்களில் உள்ள சட்டங் களின் படி செயல்பட்டுக் கொள்ளலாம் என்று சொன்னார்கள். மத்திய சட்டத்திற்கு முரணாக மாநில அரசுகள் தங்கள் சட்டங்களை அமலாக்கி வருகிறார்கள். இது நாடாளுமன்ற நடைமுறையை பலகீனப்படுத்தக்கூடியதாக இருக்கும். இரண்டாவதாக, மாநிலங்களவையில் எந்தெந்த மசோதாக்களுக்கெல்லாம் எதிர்ப்பு வருகிறதோ அப்போதெல்லாம் அவை பண மசோதாக்களாக அறிவிக்கப் படுகின்றன. ஆதார் மசோதா இப்போது பண மசோதா எனப்படுகிறது. இதை எதிர்த்து நீதி மன்றங்களில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மூன்றாவதாக, இந்திய ரிசர்வ் வங்கியின் மூலச் சட்டங்களை நிதி மசோதா என்ற பெயரில் திருத்தும் சதி வேலைகள் நடைபெறுகின்றன. பொருள் மற்றும் சேவை வரி மசோதாவை எடுத்துக் கொண்டோமேயானால், நாங்கள் இரண்டாண்டுகளாக அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தவேண்டும் என்று கடந்த இரண்டாண்டு களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். நாடாளுமன்றம் என்பது காங்கிரஸ் கட்சிக் கும் பாரதீய ஜனதா கட்சிக்கும் இடையே இரகசிய பேரம் நடத்தும் களமாக இருக்க முடியாது. அவர்கள் ஒத்த கருத்தினை உருவாக்க தயாராக இல்லை. இந்த அரசாங்கத்தின் அராஜகப் போக்கு என்பது இது தான்.
இந்த அரசாங்கம் ஏற்கனவே அறிவித் திருந்த “நல்லாட்சி” மற்றும் “அச்சா தின்” போன்ற திட்டங்களுக்கான இந்த அரசாங்கத்தின் கொள்கை உருவாக்கம் பற்றி தங்கள் கருத்து?
நாம் இப்போது இந்த அரசாங்கம் விளம்பரப்படுத்திய “அச்சா தின், மேக் இன் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா” போன்ற பகட்டான கோஷங் களின் உண்மை நிலையை நாம் இப்போது பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வோம். அவர்கள் ஆண்டிற்கு இரண்டு கோடி வேலைகள் என்று உத்தரவாதம் கொடுத் தனர். ஆனால், இந்த தொழிலாளர் அமைப்பு, 2015ம் ஆண்டில், இந்தியாவில்பதிவு செய்யப்பட்ட மொத்த வேலை யில்லாதவர்களின் எண்ணிக்கையில் 1 சதவீதத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே அதாவது 1.35 லட்சம் பேருக்குமட்டுமே வேலைவாய்ப்பு உருவாக்கப்பட் டுள்ளது என்று தெரிவிக்கிறது. கடந்த 17 மாதங்களாக, இந்தியாவின் ஏற்றுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்து கொண்டு வருகிறது. மோடி ஆட்சிக்கு வந்தபோது 461.5 பில்லியன் (1 பில்லியன்= 100 கோடி) டாலராக இருந்த ஏற்றுமதி தற்போது 261.13 பில்லியன் டாலராகக் குறைந்துள்ளது. இந்த மார்ச் மாதம் உற்பத் தித் துறை -1.2 சதவீதமாகியுள்ளது. இந்த ஆண்டு முழுவதும் உற்பத்தித் துறை2 சதவீத வளர்ச்சியை மட்டுமே எட்டியுள்ளது. 2013-14ல் 4.8 சதவீதமாக இருந்ததொழில் உற்பத்தி குறியீடானது தற் போது 4 சதவீதமாகக் குறைந்துள்ளது. 2011க்கும் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் 5 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்திருந்த கேந்திர துறைகள் தற்போது 2.7 சதவீத வளர்ச்சியாகக் குறைந்துள்ளது. 2014-15ல் முதலீட்டு முன்மொழிவுகள் 23 சதவீதமாக வீழ்ச்சியடைந் துள்ளது. 2016ம் ஆண்டின் முதல் காலாண்டின்போது முதலீட்டு முன்மொழிவுகள் ரூபாய் 60,130 கோடி. ஆனால், இதற்கு முன்னால் இது 3.11 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. வறட்சி மற்றும் நீர்பற்றாக்குறையின் காரணமாக விவசாயவளர்ச்சி 1.1 சதவீதமாகியுள்ளது. விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்துள் ளன. வேலைவாய்ப்புகள் உருவாக்கப் பட்டுள்ளனவா என்பதுதான் நம் கேள்வி.
இந்த அரசாங்கத்தின் சீர்திருத்தக் கொள்கைகள் பற்றி உலக அளவில் ஏராளமாக பேசப்படுகிறதே?
சர்வதேச நிதி மூலதனத்தை தாஜாசெய்வது மற்றும் அதன் நிர்ப்பந்தங்களுக்கு அடிபணிந்து செல்வது போன்ற இந்த அரசாங்கத்தின் குணாம்சத்தின் காரணமாகத்தான் இப்படி பேசப்படு கிறது. பிரதம மந்திரியின் வெளிநாட்டுப் பயணங்களெல்லாம் அந்நிய மூலதனங் கள் இந்தியாவிற்குள் நுழைவதற்கு வழிவகை செய்யும் வகையில் வடிவமைக்கப் பட்டுள்ளன. அந்நிய மூலதனங்கள் அதிகமான லாபம் சம்பாதிக்கும் வகையில் இந் திய நாட்டின் பாதுகாப்புத்துறை உட்பட அனைத்துத் துறைகளும் பாஜக வினால் திறந்து விடப்பட்டுள்ளன. இதன் காரணமாக இந்தியாவின் உள்நாட்டு மூல தனம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியஉள்நாட்டு மூலதனம் என்பது பாஜக வுக்கு இரண்டாம்பட்சமாகத்தான் உள்ளது. அவர்களுடைய முக்கிய நோக்கமே இந்தியாவின் மதச்சார்பற்ற குடியரசு தன்மையை மாற்றி பாஜகவின் இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதும் அதற்கான சர்வதேச ஒப்புதலை பெறுவதும் தான்.
நன்றி : தீக்கதிர்