கட்சியின் இலவசம் வாங்கும் கூட்டமில்லை;அரசின் இலவச கல்வியை வாங்க வந்த கூட்டம்: நெல்லையில் ஒரு ஆச்சர்யம்…

R Narumpu Nathan

இலவசமாக ஏதும் வாங்க வந்த கூட்டமா ?
மருத்துவமனையில் நிற்கும் கூட்டமா ?

ரெண்டுமே இல்லை. நெல்லை கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு மாணவியர் சேர்க்கைக்காக காத்திருக்கும் பெற்றோர்கள் கூட்டம் தான் இப்படி அலைமோதுகிறது.

கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக மாநில அளவில் ரேங்க் எடுத்து சாதனை புரிந்த பள்ளி என்பதால் தான் இப்படி ஒரு கூட்டம்.

தொடர்ந்து 15 ஆண்டுகளாக 100 சதவீத தேர்ச்சி பெறும் பள்ளியும்கூட.(அரசு பள்ளி என்பதை நினைவில் கொள்க..)

கட்டணம் வெறும் ரூ.50, மற்றும் ரூ.200/- மட்டுமே. வேறு எதுவும் இல்லை.

சுமார் 5000 மாணவியர்கள் படிக்கும் இந்தப் பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மட்டும் உண்டு. போதிய அளவில் கழிப்பறை,தண்ணீர் வசதிகளும் தேவைப்படுகிறது.

நெல்லைக்குப் பெருமை சேர்க்கும் கல்வி நிறுவனம் இது.

ஆசிரியர் கருத்து:

அரசு பள்ளி என்பதும், அதில் சேர்க்கைக்கு இந்தளவு கூட்டம் அள்ளுகிறது என்பதும் நிஜமாகவே பெருமைக்குரிய விஷயம்தான். அப்பள்ளி கடந்த 15 வருடங்களாக 100 % வெற்றி பெறுகிறது என்பதும், மாநில அளவில் ரேங்க் எடுத்த பள்ளி என்பதும் கூட மகிழ்ச்சியான தகவல்தான்.

ஆனால், இதற்காகத்தான் பெற்றோர்கள் அலைமோதுகின்றனர் என்றால், நாமக்கல் கோழிப்பண்ணை பள்ளிகளை போன்றுதான், அரசு பள்ளிகளையும் மாற்ற அவர்கள் முயர்ச்சித்து கொண்டிருக்கிறார்களோ என்று சந்தேகம் ஏற்படுகிறது.

அரசு பள்ளி என்பது, (இன்று கனவிலும் காண்பதற்கு சாத்தியமற்ற) மிகப்பெரும் மைதானங்களும், மரங்களும், காற்றும், விளையாட்டுமான ஒன்று. அங்கு படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல. படிப்பும் ஒரு வாழ்க்கை. ஆனால், பெற்றோரோகளின் நெருக்குதல் காரணமாக எங்கோ ஒரு இடத்தில், அரசு பள்ளிகளும் , கோழிப்பண்ணை பள்ளிகளாக மாறத் தொடங்கிவிட்டனவோ என்ற அச்சம்தான் எழுகிறது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.