ஸ்டாலினை அவமானம் செய்யும் நோக்கமில்லை ; விழாவில் கலந்துகொண்டதற்கு வாழ்த்துக்கள் : “ஜெ”தானா இது ???

தமிழக முதல்வராக ஜெயலலிதா 6வது முறையாக நேற்று பதவியேற்றுக்கொண்டார். இந்த விழாவில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். இந்த விழாவில் ஸ்டாலினுக்கு பத்தாவது வரிசையில் இடம் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருந்தார். தி.மு.க.,வை, ஜெயலலிதா திட்டமிட்டு அவமானபடுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் “பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.  ஸ்டாலின் பங்கேற்பது தெரிந்திருந்தால், முன்வரிசையில் இடம் ஒதுக்க அறிவுறுத்தியிருப்பேன். ஸ்டாலினையோ, தி.மு.க.,வையோ அவமரியாதை செய்யும் எண்ணமில்லை. அதிகாரிகளின் பதவி வரிசைப்படியே இருக்கை ஒதுக்கப்பட்டது. எனினும், விதிகளை தளர்த்தி முன் வரிசையில் இடம் ஒதுக்க அறிவுறுத்தியிருப்பேன். மாநில மேம்பாட்டிற்காக ஸ்டாலின், தி.மு.க., செயல்படுவதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

1.jpg

ஜெயலலிதாவின் இந்த அறிக்கையினால், அதிமுக திமுக என்று இரண்டு கட்சி தொண்டர்களுமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஜெயாவா இது என்று ஆச்சர்யத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.