Joshua Isaac Azad
நாடு திரும்பிய பர்மா தலித் அகதிகள் மீது தாக்குதல்-ராமநாதபுரம் 1923
முதுகளத்தூர் கலவரம் – மாவீரன் இம்மாவேல் சேகரன் படுகொலை -1957
வெண்மணி 44 தலித் கூலி தொழிலாளர்கள் படுகொலை 1968
விழுப்புரம் 12 தலித்துகள் படுகொலை – சேரிகள் மீது தாக்குதல் 1978
உஞ்சனை 5 தலித்துகள் படுகொலை – வாழ்வாதாரம் அழிப்பு 1979
மீனாட்சிபுரம் கலவரம் 180 தலித் குடும்பங்கள் இஸ்லாத்தை தழுவுதல் -1981
காட்டுமன்னார்குடி ரெட்டியூர் பாண்டியன் படுகொலை -1985
மதுரை சவரக் கடைகளில் தீண்டாமை – உள்ளாட்சி தேர்தலின்போது சேரிகள் தாக்குதல் 1989
தர்மபுரி மேனாசி சேரி மீது தாக்குதல்- 1990
சிதம்பரம் பத்மினி போலீஸ் கூட்டு பாலியல் வன்முறை -1992
சென்னகரம்பட்டி 2 தலித்துகள் படுகொலை -1992
பொன்னூர் சேரி மீது போலீஸ் தாக்குதல்- 1992
காரணை பஞ்சமி நில மீட்பு போராட்டம் 2 தலித்துகள் படுகொலை-1994
ஜலகண்டபுரம் பள்ளியில் தீண்டாமை – மாணவி தனம் கண் பார்வை பறிப்பு-1995
புலியங்குடி கலவரம் -1995
கொடியங்குளம் சேரி மீது போலீஸ் தாக்குதல்- 1995
பாப்பாபட்டி கீரிப்பட்டி உள்ளாட்சி தேர்தல் வன்கொடுமை 1996 – 2006
மேலவளவு 6 தலித்துகள் படுகொலை -1997
போக்குவரத்து நிறுவனங்கள் பெயர் மாற்றம் தலித்துகள் மீது தாக்குதல்-1997
ஒகளூர் சேரி மீது போலீஸ் தாக்குதல் – 1998
கடலூர் புலியூர் சேரி மீது தாக்குதல்- 1998
திண்டுக்கல் குண்டுபட்டி சேரி மீது போலீஸ் தாக்குதல்- 1998
தாமிரபரணி 17 தலித்துகள் படுகொலை -1999
கோஆதனூர் பொன்னருவி படுகொலை -1999
சிதம்பரம் பாராளுமன்ற தேர்தல் – சேரிகள் மீது தாக்குதல் -1999
செகுடந்தாளி முருகேசன் படுகொலை -1999
சிதம்பரம் புளியங்குடி 3 தலித்துகள் தலை துண்டிப்பு- 2000
தர்மபுரி மருக்காளம்பட்டி சேரி மீது தாக்குதல் -2001
தூத்துக்குடி சங்கரலிங்கபுரம் சேரி மீது போலீஸ் தாக்குதல்- 2001
திண்ணியம் தலித் வாயில் மலம் திணிப்பு -2002
பண்ருட்டி சிறுதொண்டமாதேவி தலித் பெண்கள் மீது பாலியல் வன்முறை -2003
திருமங்கலம் கீழஉறப்பனூர் தலித் பெண் மீது மனித மலம் ஊற்றப்பட்டது -2003
புதுகூரைபேட்டை கண்ணகி முருகேன் ஆணவ படுகொலை -2003
காலாபட்டி சேரி மீது தாக்குதல் -2004
சேலம் திருத்தலைகிரி இரட்டை குவளை முறை தலித் இளைஞர் மீது தாக்குதல்-2005
கண்டதேவி தேரோட்டம் தலித்துகள் உரிமை மறுப்பு-2005
கடலூர் பத்திரக்கோட்டை சேரி தாக்குதல் -2006
மானூர் ராஜா ஆணவ படுகொலை- 2007
கோபிசெட்டிபாளையம் திருமண அரங்கு மறுப்பு 144 தடை விதிப்பு-2007
அருப்புக்கோட்டை கல்லூரணி தலித்துகள் மீது தாக்குதல்- 2008
வண்டிபாளையம் ராஜா படுகொலை -2009
விழுப்புரம் ஆனாங்கனூர் தலித் மாணவன் படுகொலை -2010
தாழையூத்து ஊராட்சி மன்ற தலைவி தலித் பெண் கிருஷ்னவேணி மீது தாக்குதல் -2011
ராமநாதபுரம் பள்ளப்பசேரி தலித் மாணவன் படுகொலை -2011
பரமக்குடி 6 தலித்துகள் போலீஸ் துப்பாக்கிசூட்டில் படுகொலை -2011
தர்மபுரி மூன்று சேரிகள் மீது தாக்குதல் -2012
தர்மபுரி தலித் இளைஞர் இளவரசன் ஆணவ படுகொலை -2012
விருதாச்சலம் நிறமணி சேரி தலித்துகள் சமூக புறக்கணிப்பு -2012
வடலூர் பாச்சாரப்பாளையம் சேரி மீது தாக்குதல் -2012
விழுப்புரம் சேஷசமூத்திரம் கோவில் தேர் உரிமை மறுப்பு -2012
பண்ருட்டி மேலிருப்பு சேரி மீது தாக்குதல் -2013
தூத்துகுடி கே.வேலாயுதபுரம் தலித்துகள் மீது தீண்டாமை -2013
மரக்காணம் கட்டையன் தெரு சேரி மீது தாக்குதல் -2013
தலித்துகளுக்கு எதிரான தலித்தல்லாத சாதிகளின் கூட்டமைப்பு- 2013
சிதம்பரம் வடக்குமாங்குடி சேரி மீது தாக்குதல் -2014
சேலம் தலித் பொறியியல் மாணவன் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை -2015
விழுப்புரம் சேஷசமூத்திரம் தலித்துகளின் கோவில் தேர் எரிப்பு -2015
நாகப்பட்டினம் திருநாள்கொண்டச்சேரி தலித் பிணத்திற்கு பொதுப் பாதை மறுப்பு -2016
உடுமலைப்பேட்டை தலித் இளைஞர் சங்கர் ஆணவ படுகொலை –2016
(2013ஆம் ஆண்டு வரைக்குமான பட்டியல் ‘நீதி மறுக்கப்பட்டதும்; மக்கள் ஏமாற்றப்பட்டதும்‘ என்ற தலைப்பில் தோழர்கள் முருகப்பன், ஜெசி ஆகியோரால் தொகுக்கப்பட்டு SASY, HRF மற்றும் NDMJ அமைப்புகள் ஒன்றினைந்து வெளியிட்ட அறிக்கையிலிருந்து எடுக்கப்பட்டது. அவர்களுக்கு என் நன்றிகள்)