நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிட்ட தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் கி. வீரலட்சுமி 14083 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர், அதிமுக வேட்பாளருக்கு அடுத்த படியாக வந்துள்ளார். மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் வீரலட்சுமி போட்டியிட்டார். அதிமுக சார்பில் போட்டியிட்ட சி. ஆர். சரஸ்வதியின் வெற்றியை இவர் வெகுவாக பாதித்திருக்கிறார். சரஸ்வதி 90, 000 வாக்குகளும் திமுக வேட்பாளர் 1லட்சத்து 11 ஆயிரம் வாக்குகளையும் பெற்றுள்ளார்.
கி.வீரலட்சுமி குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டது நாம் தமிழர் கட்சி. நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் போட்டியிட்டு ஐந்தாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். அவர் வாங்கிய வாக்குகள் 12497.
அதிமுக, திமுக, தமிழ் மாநில காங்கிரஸ், பாமக ஆகியவை இந்தத் தொகுதியில் முதல் நான்கு இடங்களைப் பிடித்தன.