”ஊழல் பணநாயகம் வென்றுள்ளது”

தேர்தல் முடிவுகள் குறித்து தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் ஊழல் பணநாயகம் வென்றுள்ளது அதிமுகவும், திமுகவும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாயை வாரி இறைத்து வாக்குகளை ‘வாங்கி’ இருக்கின்றன. தமிழகத்தில் இந்த நச்சுச் சுழல் தொடரவிடாமல், மக்கள் ஆட்சித்தத்துவம் காக்க உத்வேகத்துடன் தொடர்ந்து போராடுவோம். மாற்று அரசியலை முன்னெடுத்துச் செல்ல அகரம் எழுதி இருக்கின்ற தேசிய முற்போக்கு திராவிட கழகம் -மக்கள் நலக் கூட்டணி -தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்து அமைத்த கூட்டணியின் வேட்பாளர்களுக்கு வாக்கு அளித்த வாக்காளப் பெருமக்களுக்கும், தேர்தல் களத்தில் அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபட்ட தேமுதிக – மறுமலர்ச்சி திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி – விடுதலைச் சிறுத்தைகள் கட்சி -தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆகிய கட்சிகளின் செயல்வீரர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.


தமிழ் நாட்டில் ஊழல் பணநாயகத்திற்கு எதிராக மக்கள் நலனையும், ஜனநாயகத்தையும் காக்க நாங்கள் அமைத்துள்ள ஆறு கட்சிகளின் கூட்டணி மிக்க உறுதியுடன், வலுவாக தமிழக அரசியல் களத்தில் இயங்கும்.

One thought on “”ஊழல் பணநாயகம் வென்றுள்ளது”

  1. If you stick to your ideology which proposed Mr.Vijayakanth as the CM candidate (which was the PRIME REASON for your humiliating defeat) , I’m afraid to say that your vision is going to end up nothing more than a dream.

    #This is a honest notion from a common man who wanted to see your dreams coming true & unfortunately one amongst that so called ‘0.9% of idiots’ !

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.