தேர்தல் முடிவுகள் குறித்து சிபிஐ மாநிலச் செயலாளர் ஆர்.முத்தரசன் கருத்து:
தமிழக தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. இந்த முடிவுகளில் நமக்குப் பெரிய ஆச்சரியம் இல்லை. இத்தகைய வெற்றியைப் பெற்றமைக்காக அதிமுக, திமுக கட்சிகள் வெட்கப்பட வேண்டும்.
மே மாதம் 16 ம் தேதி இயற்கை மழை பொழிந்தது. அதற்கு முன்னதாக ஊழல் மூலம் சேர்த்த கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொண்டு ஏற்கெனவே ஆண்ட கட்சியும், ஆளுகின்ற கட்சியும் தமிழ்நாடு முழுவதும் நீக்கமற பணமழையை பொழிந்தன. அண்ணா , காமராஜர் போன்ற தலைவர்கள் வெற்றியையும், தோல்வியையும் சமமாக பார்த்தனர். இவர்களைப் போல எவ்வித ஜனநாயக நெறிமுறையையும் மீறி நாடாளுமன்ற ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கவில்லை.
இத்தகைய கடுமையான சூழலில் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் நம்முடைய அணியின் வெற்றிக்கு உழைத்த நம்முடைய தோழர்களுக்கும் , நண்பர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது அரசியல் நிலைப்பாடு சரியே. ஊழல், இயற்கை வளங்கள் பாதுகாப்பு, மதுவிலக்கு,மாற்று ஆட்சி போன்ற ஆதாரமான கொள்கைகளை முன்வைத்து நாம் தேர்தலைச் சந்தித்தோம். அதற்கான அவசியம் இன்னமும் இருக்கிறது. எனவே ம.ந.கூ,தேமுதிக,தாமாக ஆகிய கட்சிகளின் ஒற்றுமையும் , கூட்டணியும் தொடரும்.