தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் முதல்முறையாகக் கலந்துகொண்டார். நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலில் பல முக்கியமான கேள்விகளுக்கு பதிலளித்திருக்கிறார். அதில், ஊடகங்கள் குறித்தும் சில உண்மைகளைப் பேசியிருக்கிறார். நேர்கண்டவர் செந்தில்.
ஏன் இந்தக் கூட்டணி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற கேள்விக்கு,
“ஜெயலலிதாவை பார்க்க வந்து மாண்டுபோனவர்கள் பற்றி திரும்ப திரும்ப ஒளிபரப்பாமல் திருமாவளவன் தூங்கியதை திரும்ப திரும்ப காட்டினீர்கள். இதெல்லாம் எங்கள் அணியை சிதைக்கும் முயற்சிதான்” என பதிலளித்தார்.