சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. ஆரம்ப முடிவுகள் அதிமுக வெற்றி பெறும் என காட்டியிருக்கின்றன. இதுகுறித்து பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்களின் கருத்துகளின் தொகுப்பு…
ஜெயலலிதாவின் உத்தி / தந்திரத்துக்கு (strategy) கிடைத்த வெற்றியாகவே இந்த முடிவுகளைப் பார்க்கிறேன். முதலில் உள்ளாட்சி தேர்தலில் தனித்து நின்று ஒரு பரிட்சார்த்த முயற்சியை செய்தார் ஜெயலலிதா. அதில் பெற்ற வெற்றியை அடுத்து மக்களவை தேர்தலில் அதனைத் தொடர்ந்தார். அதிலும் அவர் கணக்கு வெற்றிபெற்றது. அதுவே இப்போதும் கைகொடுத்துள்ளது. அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியும் திமுக தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிடுவது ரிஸ்க் என்பது அவர் முடிவாக இருக்க வேண்டும். ஆனால், பாராளுமன்றத் தேர்தல் போல் அமைந்துவிடுமோ என்ற பயம் இருநதது. அப்படி அமையாத வரைக்கும் நிம்மதி. இன்னும் நேரம் இருக்கிறது பார்ப்போம்.
திமுகவின் தோல்விக்கு இப்போதும் மநகூ அணியை, தமிழ்தேசியவாதிகளை, ஈழத்தமிழர்களைத் தூற்றுகின்றனர் சிலர். திமுக தொடர் தோல்விக்கு உண்மையான காரணம் எதுவென கடைசிவரையில் தேடாதீர்கள். உங்களது இந்தக் கூவல்கள் ஒரு ஊழல், சாராய அரசை மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறது.
அ.தி.மு.க எப்போதும் வெல்லக்கூடாது என்று நினைப்பவர்களில் நானும் ஒருவன். ஆனால் இத்தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க தோல்வியை சந்திக்க வேண்டும் என் எண்ணியிருந்தேன். திமுகவின் இத்தோல்வி மநகூவின் வெற்றி.
மக்களை
மக்களால்
மக்களுக்காகவே
பணம் எண்ணப்படுகிறது
எண்ணத்தில் பணம் படுகிறது
கூட்டாட்சிக்கு மறுப்பு
ஈழத்துரோக காங்கிரஸ் கூட்டனி
சபரீசனின் கார்ப்பரேட் பாலிட்டிக்ஸ்
மாற்று அரசியலை முன்னெடுத்தவர்கள் மீதான அவதூறுகள்
வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தலையும் நியாயப்படுத்தியது
ஊழல்வாதிகளை அப்புறப்படுத்தாமை
இலவசங்கள் அடங்கிய தேர்தல் அறிக்கை
மது ஒழிப்பில் போலித்தனம்
பாஜக உட்பட யாருடன் வேண்டுமானாலும் கூட்டணிக்குத் தயாரானது
அருவெறுப்பான மீடியா அரசியல்
# இவை எதுவும் காரணமில்லை; ம ந கூவே தோல்விக்குக் காரணம் என்று நீங்கள் சொன்னால் நீங்கள் முற்போக்கு, சமூக நீதி அறிவுஜீவி