தேர்தல் மற்றும் வர்த்தக நோக்கங்களுக்கு நடத்தப்படுகிற கருத்துக் கணிப்புகள் எவ்வளவு போலியான கருத்துத் திணிப்புகள் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. லயோலா முன்னாள் மாணவர்கள், அந்நாள் மாணவர்கள், முந்தாநாள் மாணவர்கள் துவங்கி விகடன், நக்கீரன் என இதழ்களும், தொலைக்காட்சிகளும் உற்பத்தி செய்த தேர்தலுக்கு முந்தைய, தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துத் திணிப்புகளும் அப்பட்டமாக தடைசெய்யப்பட வேண்டியவை. அவை அனைத்தும் விளம்பரங்கள் மற்றும் கட்சிகளிடமிருந்து பலனை எதிர்பார்த்து உருவாக்கப்பட்டவை.
ஊடகங்களின் நேர்மையை இத்தேர்தல் அம்பலப்படுத்தியது. அடுத்த நான்கரை ஆண்டுகள் எதிர்கட்சி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து கார்ப்பரேட் நாடகப்பயணத்தை நடத்தும். ஊடகங்கள் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் ஊழல்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து அடுத்த புரட்சிப்போராட்டத்தை துவங்கும். ஊழல்வாதி ஜெயலலிதா வென்றாலும் இவர்கள் ஏற்பார்களே தவிர மாற்று அரசியல் அல்லது மக்கள் மீது அக்கரையுள்ள வேட்பாளர்களை இவர்கள் உருவாகவே அனுமதிக்கமாட்டார்கள்.
திரு.யோ, சமூக-அரசியல் விமர்சகர்.