மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக- தாமாக கூட்டணி வேட்பாளர்களான உளூந்தூர்பேட்டை தொகுதி வேட்பாளர் விஜயகாந்த், பவானிசாகர் பி.எல்.சுந்தரம், தளி தொகுதி வேட்பாளர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு நிச்சய வெற்றி உண்டு என தந்தி டிவியின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடும் காட்டுமன்னார்கோயில் தொகுதியிலும் ரவிக்குமார் போட்டியிடும் வானூர் தொகுதியிலும் இழுபறி நிலை நீடிப்பதாகவும் இந்தக் கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
கருத்து கணிப்பு முடிவுகள்
அதிமுக – 111
திமுக – 99
மநகூ – 03
பாமக – 02 (பென்னாகரம், ஆற்காடு)
பாஜக – 01 (வேதாரண்யம்)
இழுபறி – 16
இழுபறியில் உள்ள தொகுதிகளாக சொல்லப்பட்டவை:
காட்டுமன்னார்கோயில்
நாகப்பட்டினம்
ஒசூர்
அரூர்
பாப்பிரெட்டிபட்டி
கம்பம்
வந்தவாசி
வேலூர்
குடியாத்தம்
வானூர்
சேலம் வடக்கு
பல்லாவரம்
ஆயிரம் விளக்கு
ஆவடி
திரு. வி.க.நகர்
குளித்தலை