படிப்பிலும் வென்ற டாஸ்மாக் போராட்டத்தில் சிறையில் இருக்கும் மாணவர்!

மதுவிலக்கு போராட்டத்தில் பங்கு பெற்று இரு முறை சிறைசென்ற மாரிமுத்து 12ம் வகுப்பில் 971மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

டாஸ்மாக்கை மூட வேண்டும் என்று போஸ்டர் ஒட்டியதற்காக தற்போது சிறையில் உள்ளார். இவரது தாய் சித்தாள் வேலை செய்கிறார். படிக்கும் போதே சிறு சிறு வேலைகளுக்கு சென்று தனகு கல்விச் செலவையும் சுமந்துள்ள மாரிமுத்து எல்லா போராட்டத்திலும் முன்னணியாக நிற்பவர்.

student mark

மதுரவாயில் அரசு பள்ளியில் +2 படிக்கும் மாணவர் மாரிமுத்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியில் சேர்ந்து மாணவர் பிரச்சினைகளுக்காக போராடும் அவர் ஏற்கனவே பச்சையப்பா மாணவர்களின் டாஸ்மாக் மூடும் போராட்டத்தில் சிறை சென்றவர். பகுதியில் மக்கள் அதிகாரம் அமைப்பில் இணைத்து மதுக்கடைகளை மூடுவதற்கு போராடுகிறார். மே 5 மதுரவாயல் நொளம்பூர் டாஸ்மாக் கடையை மூடும் போராட்டத்தில் இவரும் காவல் துறையால் கடுமையாக அடிக்கப்பட்டிருந்தார்.

இன்றும் அவரால் இயல்பாக நடக்க முடியவில்லை. இந்த நேர்காணல் எடுக்கப்பட்ட அடுத்த நாள் இரவில் அவர் மீண்டும் போலிசால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். குற்றம் என்ன? மே 5 போராட்டத்தில் போலிஸ் நடத்திய அடக்குமுறையை கண்டித்து சுவரொட்டி ஒட்டியதுதான் அந்த குற்றம்.

தனது பள்ளி மாணவர்கள் பலரை அரசு குடிகாரர்களாகவும் பொறுக்கிகளாகவும் மாற்றியிருக்கும் கொடுமையினை விவரிக்கிறார் மாரிமுத்து. வாரம் இருமுறை குடிப்பது, பிறகு குடிக்காமல் இருக்க முடிவதில்லை எனும் நிலையினை மாணவர்களும் அடைகிறார்கள். காசுக்கு வழிப்பறி செய்வது, மாணவர்களிடம் தட்டிப் பறிப்பது எல்லாம் நடக்கிறது. இந்நிலையினை மாற்றி பல மாணவர்களை புடம் போட்டிருக்கிறது பு.மா.இ.மு.

அப்படித்தான் மே 5 போராட்டத்தில் சுமார் 40 மாணவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முன்னரும் பல போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் இவர்கள். போராட்டக் களத்தில் போலிசின் கொடூரத்தை விவரிக்கும் மாரிமுத்து அதனால் மாணவர்கள் பயப்படாமல் போலீசின் அடக்குமுறையை அங்கேயே தட்டிக் கேட்டதை பெருமையுடன் விவரிக்கிறார்.

வீடியோவின் இறுதிப் பகுதியில் தனது நண்பனுக்கு ஏற்பட்ட சோகத்தை விவரிக்கிறார். குடியால் அந்த நண்பனது தந்தை இறந்ததை கண் கலங்க கூறும் மாரிமுத்து, இத்தகைய சோகங்களை நிறுத்தும் பொருட்டே தன்னைப் போன்ற மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் உறுதியாக இருப்பதாக கூறுகிறார்.

இந்த போராட்டம் காசு வாங்கிக் கொண்டு நடத்தப்படுவதாக கூறுப்படுவதைக் கேட்கும் போது அத்தகைய அவதூறுகளை எழுப்புபவர்கள் தைரியமிருந்தால் மதுரவாயில் பள்ளி பக்கம் வந்து கூறுமாறு கேட்கிறார். இப்போது அவர் சிறையில் இருக்கிறார். இந்த போராட்டத்திற்காக அவர் இரண்டாம் முறையாக சிறை சென்றிருக்கிறார்.

நன்றி: வினவின் களச்செய்திகள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.